டெல்லி சட்டப் பேரவையில் 2024-25ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை அந்த மாநில நிதியமைச்சர் அதிஷி இன்று தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் ஏராளமான புதிய அறிவிப்புகள் மற்றும் துறை வாரியாக திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு குறித்த அறிவிப்புகளை வெளியிட்டு பேசினார். அப்போது, 18 வயது நிரம்பிய பெண்களுக்கு வரும் ஜூலை மாதம் முதல் மாதந்தோறும் ரூ. 1,000 வழங்க ரூ. 2,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அறிவிப்பை வெளியிட்டார்.மேலும் அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துபவர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறும் பெண்கள் இந்த திட்டத்துக்கு தகுதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டது. அப்போது குறுக்கிட்ட முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அனைத்து பெண்களுக்கும் ரூ. 1000 வழங்கப்படும் என அறிவித்தார்.
Please follow and like us: