சென்னை மற்றும் டெல்லி என இரண்டு அணிகளுக்கும் இந்தப் போட்டியில் வெற்றி பெறுவது மிகவும் அவசியம். அதன் மூலம் அடுத்த சுற்றுக்கு முன்னேறி செல்லும் வாய்ப்பை இந்த அணிகள் உயிர்ப்புடன் வைக்கலாம். இரு அணிகளும் இதுவரை நேருக்கு நேர் பலப்பரீட்சை செய்ததில் சென்னை 17 முறையும், டெல்லி 10 முறையும் வெற்றி பெற்றுள்ளது. இன்றைய போட்டியின் முடிவில் இந்த வெற்றி கணக்கை மேலும் ஒன்று என கூட்டப்போவது யார் என்பது தெரியும்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் எதிர்கொள்ள இருக்கும் டெல்லி கேபிடல்ஸ் அணி, ‘வணக்கம் வாழவைக்கும் சென்னை! இன்னைக்கு மேட்சுக்கு ரெடியா?’ என சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளது
அதில் அவர்கள் இருவரும் தங்கள் அணியின் ஜெர்ஸியை பிரதிபலிக்கும் வகையில் ஆடை அணிந்துள்ளனர். நம்ம ஊரின் வேட்டி சட்டை தான். இருவரும் இளநீர் பருகுவது போல இந்தப் படம் உள்ளது. அதற்கு ‘வணக்கம் வாழவைக்கும் சென்னை! இன்னைக்கு மேட்சுக்கு ரெடியா?’ என கேப்ஷன் கொடுத்து சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளது டெல்லி அணி.