இஸ்லமாபாத் நீதிமன்ற வளாகத்தில் வைத்து அவரை போலீஸார் கைது செய்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பெரும் பரபரப்பு நிலவியது.
இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், “இம்ரான் கான் இஸ்லமாபாத் நீதிமன்றத்தில் தனது ஜாமீனை புதுப்பிக்க வந்தார். அப்போது அவரது காரை சூழ்ந்த போலீஸார் அவரை கைது செய்தனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இம்ரான் கான் மீது பாகிஸ்தானில் 100-க்கும் அதிகமான வழக்குகள் உள்ளன. இதில் ‘காதிர் ட்ரஸ்ட்’ வழக்கில் அவர் கைது செய்யப்பட்டிருப்பதாக பாகிஸ்தான் காவல்துறை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
இம்ரான் கான் கைது குறித்து பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் அசார் மாஷ்வானி இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. இந்த நிலையில் இம்ரான் கானின் கைதை எதிர்த்து அவரது கட்சியான தெஹ்ரீக்-இ- இன்சாப் நாடு முழுவதும் போராட்டம் நடக்கும் என்று அறிவித்துள்ளது.