தமிழகத்தில் 4 இடங்களில் ‘ஃபுட் ஸ்ட்ரீட்’ ‘FOOD STREET’- ரூ. 4 கோடியில் அமைக்க திட்டம்

Spread the love

சென்னை: தமிழகத்தில் 4 இடங்களில் ரூ. 4 கோடி செலவில் ‘ஃபுட் ஸ்ட்ரீட்’ அமைக்க முடிவு செய்யப்பட்டுள்து.

நாடு முழுவதும் 100 ஆரோக்கியமான உணவு வீதிகளை உருவாக்கும் உணவு வீதி திட்டத்தை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை செயல்படுத்த உள்ளது. உணவு வர்த்தகங்கள் மற்றும் பொதுமக்களிடையே பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான உணவுப் பழக்க வழக்கங்களை ஊக்கப்படுத்தி, அதன் வாயிலாக உணவால் ஏற்படும் நோய்களைக் குறைத்து, ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்துவதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.

இதை செயல்படுத்துவதற்கு சோதனை முயற்சியாக ஒவ்வொரு உணவு வீதிக்கும் தலா ரூ. 1 கோடியை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சகத்தின் தேசிய சுகாதார இயக்கம் வழங்கும். பாதுகாப்பான குடிநீர், கை கழுவுதல், கழிவறைகள், பொதுவான இடங்களில் தரை அமைத்தல், முறையான திரவ மற்றும் திட கழிவுகளை அகற்றல் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்துவதற்காக இந்த நிதி பயன்படுத்தப்படும்.

மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்துடன் இணைந்து, இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக் கட்டுப்பாட்டு ஆணையத்தின் தொழில்நுட்ப உதவியுடன், தேசிய சுகாதார இயக்கத்தின் வாயிலாக இது அமல்படுத்தப்படும். இந்தத் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 4 உணவு வீதிகளும், புதுச்சேரியில் 1 உணவு வீதியும் அமைக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

Please follow and like us:

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp
YouTube
Instagram
Telegram