சென்னையில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்று தமிழ்நாட்டில் முதலீடு செய்யுமாறு தொழிலதிபர்களுக்கு அழைப்புவிடுக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசுமுறை பயணமாக வெளிநாடு சென்றுள்ளார்.
தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் முதல் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு சுற்றுப்பணம் மேற்கொண்டுள்ளார். அதன்படி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று சிங்கப்பூர் சென்றடைந்தார்.
அவர் இன்று சிங்கப்பூர் தொழிலதிபர்களை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது தமிழ்நாட்டில் முதலீடு செய்ய வரும்படி சிங்கப்பூர் தொழிலதிபர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்தார்.
Please follow and like us: