Today

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் டிம் பெய்ன் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு..

Spread the love

ராஜஸ்தான் அணி ஏப்ரல் 2 ஆம் தேதி நடைபெறவுள்ள ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை எதிர்கொள்கிறது.

ஐபிஎல் நடப்பு சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக குமார் சங்கக்கரா நீடிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அணியில் இடம்பெற்றுள்ள மற்ற பணியாளர்களின் விபரங்களையும் ராஜஸ்தான் ராயல்ஸ் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இதன் படி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இயக்குனராகவும், தலைமை பயிற்சியாளராகவும் குமார் சங்கக்கரா நீடிக்கிறார். துணை பயிற்சியாளராக ட்ரேவர் பென்னி, வேகப் பந்து வீச்சுக்கான பயிற்சியாளராக லாசித் மலிங்கா ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

டெக்னாலஜி மற்றும் ஆய்வு பிரிவின் தலைவராக ஜைல்ஸ் லின்சே, வியூகம் வகுத்தல் மற்றும் திறன் மேம்பாட்டு இயக்குனராக ஜுபின் பரூச்சா, உதவி பயிற்சியாளராக சித்தார்த்தா லஹிரி, ஃபீல்டிங் பயிற்சியாளராக திஷாந்த் யக்னிக் ஆகியோரை ராஜஸ்தான் அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. இதேபோன்று தலைமை ஃபிசியோவாக ஜான் க்ளோஸ்டர், மருத்துவராக ராப் யங், ஸ்ட்ரெங்த் பயிற்சியாளராக ராஜாமணி பிரபு ஆகியோர் நீடிக்கிறார்கள். இதேபோன்று மனநல பயிற்சிளாராக மோன் ப்ரோக்மேன், உதவி ஃபிசியோவாக நீல் பேரி ஆகியோரும் ராஜஸ்தான் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

ராஜஸ்தான் அணியின் கேப்டனாக சஞ்சு சாம்சன் செயல்படுகிறார். இந்த அணியில் ஷிம்ரோன் ஹெட்மேயர், தேவ்தத் படிக்கல், ஜாஸ் பட்லர், ரியான் பராக், பிரசித் கிருஷ்ணா, ட்ரெண்ட் போல்ட், நவ்தீப் சைனி, குல்தீப் யாதவ், ரவிச்சந்திரன் அஷ்வின், யுஸ்வேந்திர சாஹல் ஆகிய முக்கிய ஆட்டக்காரர்கள் தக்க வைக்கப்பட்டனர். சமீபத்தில் நடந்து முடிந்த ஏலத்தில் ஜேசன் ஹோல்டர், ஆடம் ஸாம்பா, ஜோரூட் உள்ளிட்ட முக்கிய ஆட்டக்காரர்கள் அணியில் எடுக்கப்பட்டனர். இந்த ஐபிஎல் சீசன் தொடரில் ராஜஸ்தான் அணி ஏப்ரல் 2 ஆம் தேதி நடைபெறவுள்ள ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை எதிர்கொள்கிறது.

Please follow and like us:

Spread the love
WhatsApp
YouTube
Instagram
Telegram