சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளதாக காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெகாத்லான் ஸ்போர்ட்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட், சென்னை சார்பாக “DECATHLON 10K RUN” ஓட்டம் நாளை(ஞாயிற்றுக்கிழமை) நடைபெற இருக்கிறது. இதை முன்னிட்டு நாளை அதிகாலை 3 மணி முதல் காலை 10 மணிவரை போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. இதன் விவரம்:
அடையார் மார்க்கத்தில் இருந்து வரும் அனைத்து வாகனங்களும் திரு.வி.க.பாலம், டாக்டர் .டி.ஜி.ஸ்.தினகரன் சாலை, சாந்தோம் நெடுஞ்சாலை, காமராஜர் சாலை மற்றும் உழைப்பாளர் சிலை வரை வழக்கம் போல் எவ்வித மாற்றமும் இல்லாமல் செல்லலாம்.
போர் நினைவிடத்தில் இருந்து திரு.வி.க.பாலம் வரை வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட மாட்டாது. மேலும் வாகனங்கள் கொடி மரச் சாலை வழியாக திருப்பி விடப்பட்டு – வாலாஜா பாயின்ட் – அண்ணாசாலை வழியாக தங்களது இலக்கை சென்றடையலாம்.
ஆர்.கே.சாலையில் இருந்து காந்திசிலை நோக்கி வரும் வாகனங்கள் வி.எம்.தெருவ் சந்திப்பில் திருப்பி விடப்படும். அவ்வாகனங்கள் இராயப்பேட்டை ஹைரோடு , லஸ் கார்னர், ஆர். கே. மட் சாலை வழியாக தங்களது இலக்கை சென்றடையலாம்.
திரு.வி.க. பாலத்தில் இருந்து 3வது அவன்யூ & 2வது அவன்யூ நோக்கி வரும் அனைத்து உள்வரும் வாகனங்களும் ML பார்க்- இடதுபுறம் திரும்பி- LB சாலை- சாஸ்த்ரி நகர் 1வது அவன்யூவில் திருப்பி விடப்படும்.
திரு.வி.க. பாலத்தில் இருந்து வரும் அனைத்து பேருந்துகளும் (எம்டிசி பேருந்துகள் உட்பட) எம் எல் பூங்காவில் திருப்பி விடப்படும் – இடது- எல்பி சாலை-சாஸ்திரி நகர் 1வது அவன்யூ- சாஸ்த்ரி நகர் பேருந்து நிலையம் – 2வது அவன்யூ- 7வது அவன்யூ சந்திப்பு – வலது- எம்ஜி சாலை- எல்பி சாலை வழியாக அவர்களது இலக்கை அடையலாம்.
The police department has informed that there will be a change of traffic in Chennai tomorrow.