தமிழ்நாட்டில் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் கடந்த 4ம் தேதி தொடங்கியது. ஆரம்பத்தில் வெயிலின் தாக்கம் குறைவாக இருந்தாலும் பின்னர் படிப்படியாக அதிகரித்து, நேற்று 19 இடங்களில் வெயில் சதம் அடித்தது. அதிகபட்சமாக சென்னை மீனம்பாக்கத்தில் 108.9 டிகிரி ஃபேரன்ஹீட் வெப்பம் பதிவானது.
இதனிடையே வேலூர் அடுத்த பொய்கை சத்தியமங்கலம் கிராமத்தை சேர்ந்த முருகன் என்ற பூ வியாபாரி, 108 டிகிரி ஃபேரன்ஹீட் வெப்பத்தை தாங்க முடியாமல் மயங்கி விழுந்து உயிரிழந்தார். முருகனுக்கு சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் உள்ளிட்ட இணைநோய்கள் இருந்ததால், அவர் உயிரிழந்திருக்கூடும் என கூறப்படுகிறது.
கோடைவெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், இந்த ஆண்டின் தென்மேற்கு பருவமழை சற்று தாமதமாக தொடங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஜூன் 4ம் தேதி கேரளாவில் தென்மேற்கு பருவமழை வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.