தமிழகத்தில் ஒரு வாரத்திற்கு இடியுடன் மழை வெளுக்கும்..!!

மத்திய மற்றும் அதனை ஒட்டியுள்ள வடக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்ததாழ்வு பகுதியானது வடக்கு திசையில் நகர்ந்து, வடமேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய வங்கக்கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்ததாழ்வு பகுதியாக நிலவுகிறது. மேலும் இது வடக்கு திசையில் நகர்ந்து, 8-ஆம் தேதி வாக்கில், வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் காற்றழுத்ததாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடும்.

மேலும் படிக்க

 சர்வதேசக் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார் ‘மொயின் அலி’..!!

இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் மொயின் அலி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். 37 வயதான மொயீன், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடருக்கான இங்கிலாந்து அணியில் தேர்வு செய்யப்படவில்லை. இதையடுத்து அவர் ஓய்வு பெற முடிவு செய்தார். 2014ல் சர்வதேச அரங்கில் அறிமுகமான பிறகு, மொயீன் அலி 68 டெஸ்ட், 138 ஒருநாள் மற்றும் 92 டி20 போட்டிகளில் விளையாடினார். அவர் இங்கிலாந்துக்காக 6678 ரன்கள், 8 சதங்கள், 28 அரைசதங்கள் மற்றும் அனைத்து…

மேலும் படிக்க

விநாயகன் ஐதராபாத் விமான நிலையத்தில் பாதுகாவலர்கள் உடன் தகராறில் ஈடுபட்டதாக கைது..!!

கொச்சியில் இருந்து ஹைதராபாத் வழியாக கோவா சென்ற விமானத்தில் அவர் பயணித்துள்ளார். இந்த சூழலில் சனிக்கிழமை மாலை விமான நிலையத்தில் பணியில் இருந்த சிஐஎஸ்எப் வீரருடன் வாக்குவாதம் மேற்கொண்டதோடு தகராறும் செய்துள்ளார்.சிஐஎஸ்எப் வீரர் கொடுத்த புகாரின் அடிப்படையில் அவர் மீது வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டனர். அதன் பிறகு அவரை போலீசார் அனுப்பியுள்ளனர். நடிகர் விநாயகன், மலையாளம் மற்றும் தமிழ் சினிமாவில் நடித்து வருகிறார். கடந்த ஆண்டு ரஜினிகாந்த் நாயகனாக நடித்து வெளிவந்த ‘ஜெயிலர்’ படத்தில் வில்லனாக…

மேலும் படிக்க

தள்ளுவண்டி கடைநடத்தும் பிச்எடி மாணவரால் வியந்த அமெரிக்கர்..!!

நாட்டில் இளைஞர்கள் வேலையின்றி தவித்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துவரும் அதேவேளையில் கடந்த 10 ஆண்டுகளில் ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளன. அதேவேளையில், ஸ்டார்ட்அப் தொடங்க முடியாத பலரும் தங்களுக்கு தெரிந்த தொழில்களை சிறிய அளவில் செய்ய தொடங்கியுள்ளனர். அந்த வகையில் பலரும் தாங்கள் படித்த படிப்புக்கு வேலை இல்லாத காரணத்தால் டீக்கடை, பானிப்பூரி, ஹோட்டல், துரித உணவகம் தொடங்கி நடத்தி வருகின்றனர். எம்பிஏ படித்தவர் டீக்கடை வைத்திருப்பதாகவும், பிடெக் படித்தவர் பானிபூரி கடை நடத்துவதாகவும் கூறிய…

மேலும் படிக்க

ஒருவர் வெறும் கைகளால் பெரிய முதலைக்கு உணவளிக்கும் வீடியோ வைரலாகி, இணையத்தைத் திகிலடையச் செய்துள்ளது..!!

உயிரியலாளரும் வனவிலங்கு பாதுகாவலருமான கிறிஸ்டோபர் ஜில்லெட்டால் பகிரப்பட்ட காணொளியில், ஒரு சிறிய குளத்தில் உள்ள ஒரு பெரிய முதலைக்கு வெறும் கைகளைத் தவிர வேறு எதையும் பயன்படுத்தாமல் அமைதியாக ஒரு வான்கோழி காலை வழங்குவதைக் காணொளி காட்டுகிறது. காணொளியில், ராட்சத முதலை மெதுவாக நெருங்குகிறது, அதன் தாடைகள் அகலத் திறந்தன, அப்போது அவர் பயமின்றி அதற்கு உணவளிக்கக் கையை நீட்டுகிறார். கண் இமைக்கும் தருனத்தில் அந்த முதலை வான்கோழியின் காலை விழுங்குகிறது. ஆனால் அவர் எந்த பயத்தையும்…

மேலும் படிக்க

நடிகர் நிவின் பாலி மீதான பாலியல் குற்றச்சாட்டு வழக்கில், திடீர் திருப்பமாக அதிர்ச்சியூட்டும் தகவல்..!!

மலையாள திரையுலகில் பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் துன்புறுத்தல்கள் குறித்த நீதிபதி ஹேமா தலைமையிலான ஆணையத்தின் அறிக்கை சமீபத்தில் வெளியானது. நடிகைகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் மற்றும் நடிகர்கள், இயக்குநர்கள் உள்ளிட்டோரின் தவறான நடத்தை பற்றிய அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகி இந்திய திரையுலகத்தை உலுக்கியுள்ளது. இந்த அறிக்கையின் தாக்கத்தை தொடர்ந்து, பல திரையுலகிலும் இதுபோன்ற கமிட்டிகள் அமைக்கபட வேண்டும் எனவும், மலையாளம் மட்டுமின்றி மற்ற திரையுலகில் உள்ள பாலியல் குற்றச்சாட்டுகளும் வெளிவருகின்றன. இதையடுத்து பாலியல் துன்புறுத்தல் குறித்துப் பல நடிகைகள்…

மேலும் படிக்க

ஆப்பிள் நிறுவனத்தின் ஆண்டு வருவாய் இந்த ஆண்டு புதிய உச்சத்தை எட்டும்..!!

வன்பொருள் மற்றும் சேவைப் பிரிவில் ஏற்பட்ட வளர்ச்சியால் ஆப்பிள் நிறுவனத்தின் வருவாய் சுமார் ரூ.40 ஆயிரம் கோடி டாலர் என்ற உச்சத்தை இந்த ஆண்டில் எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஹாங்காங்கை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் கவுன்டர் பாயின்ட் (counter point) என்ற ஆராய்ச்சி நிறுவனம், தொழில்நுட்பச் சந்தை குறித்த ஆய்வுகளை மேற்கொண்டு தரவுகளை வெளியிட்டு வருகிறது. அதன்படி ஆப்பிள் நிறுவனத்தின் ஆண்டு வருவாய் குறித்த ஆய்வு முடிவுகளை தற்போது வெளியிட்டுள்ளது.அதில் இந்த ஆண்டில் மட்டும் ஆப்பிள் நிறுவன…

மேலும் படிக்க

டெல்லி மாநகரப் பேருந்தில் பயணம் செய்த மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ‘ராகுல் காந்தி’..!!

மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல்காந்தி, டெல்லி சரோஜினி நகர் பேருந்து பணிமனையில் ஓட்டுநர்கள், நடத்துனர்கள், மார்ஷல்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்தார. இது தொடர்பான புகைப்படங்களை காங்கிரஸ் கட்சி தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. அந்த பதிவில், “நமது ஜனநாயக சமூகத்தில் நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றும் ஒவ்வொரு பிரிவினரையும் ராகுல் காந்தி சந்தித்து அவர்களுக்காக குரல் எழுப்பி வருகிறார்” என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க

102 வயதான பிரிட்டன் பெண்மணி பிறந்தநாளை கொண்டாடும் விதமாக 2100 மீட்டர் உயரத்தில் இருந்து ‘ஸ்கை டைவிங்’..!! 

பிரிட்டனைச் சேர்ந்த மானெட் பெய்லி என்ற பெண்மணி தனது 102 வது பிறந்தநாளை கொண்டாடும் விதமாக சுமார் 2100 மீட்டர் உயரத்தில் வானில் பறந்து கொண்டிருந்த விமானத்திலிருந்து ஸ்கை டைவிங் செய்துள்ளார். மேலும் மூன்று தொண்டு நிறுவனங்களுக்கு நிதி திரட்டுவதற்காகவும் இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.இந்த முயற்சி சற்று பயமாக இருந்ததாகவும், ஸ்கை டைவிங் போது தமது கண்களை இறுக மூடிக் கொண்டதாகவும் பெய்லி தெரிவித்துள்ளார். மேலும் தனது செயல் வயதானவர்களை சுறுசுறுப்பாகச் செயல்பட ஊக்குவிக்கும் என நம்புவதாகவும்…

மேலும் படிக்க

அறையில் மறைந்திருந்த பாம்பு..!!

அமெரிக்க கடற்படை அணுசக்தி தொழில்நுட்ப துறையில் பணியாற்றிய ஜோயி ஜோசல்சன் என்பவர், தனது அறைக்கு தூங்க சென்றிருக்கிறார். அப்போது அவர் கட்டிலுக்கு அருகில் ஏதோ சப்தம் கேட்டுள்ளது. உடனே அவர் எழுந்து கட்டிலுக்கு அடியில் பாம்பின் சட்டை கிடந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் அறை முழுவதும் தேடி பார்த்தார். அப்போது கட்டிலுக்கு அருகில் உள்ள மேசைக்கு பின்புறத்தில் பாம்பு ஒன்று இருந்தது.அந்த பாம்பை எடுத்த ஜோசல்சன் தனது தோலில் போட்டுக் கொண்டு கண்ணாடி முன் நின்று…

மேலும் படிக்க
WhatsApp
YouTube
Instagram
Telegram