Today

ரூ.20 கோடி மதிப்பிலான போதை மாத்திரைகள் பறிமுதல் 

அசாமில் ரூ.20 கோடி மதிப்பிலான போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது சமீப காலமாக போதைப்பொருள் புழக்கம் அதிகரித்து வருகிறது. போதைப்பொருள் பழக்கத்தால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர். இதனை கட்டுப்படுத்த அரசும், போலீசாரும் பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். ஆனாலும், இவை தொடர்ந்து நடந்துக்கொண்டே தான் இருக்கிறது. இந்நிலையில், அசாம் மாநிலம் கச்சார் மாவட்டத்தில் சாலை மார்க்கமாக போதைப்பொருள் கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் பேரில் சிறப்பு…

மேலும் படிக்க

மருத்துவ கழிவுகளை கொண்டு செல்ல லாரிகளுடன் வந்த கேரளா அதிகாரிகள்!

திருநெல்வேலி மாவட்டத்தில் கொட்டப்பட்டுள்ள மருத்துவக் கழிவுகளை, தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவுபடி மீண்டும் தங்கள் மாநிலத்துக்கே கொண்டு செல்வதற்காக, கேரள அதிகாரிகள் லாரிகளுடன் வந்துள்ளனர்.திருநெல்வேலி மாவட்டத்தில் கேரளத்தின் மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டுள்ளன என குற்றச்சாட்டுகள் எழுந்தது. தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, எதிர்க்கட்சி தலைவர் இ.பி.எஸ்., உள்ளிட்டோர் நடவடிக்கை எடுக்க கோரி வலியுறுத்தி வருகின்றனர். இது குறித்து தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தியது. தமிழக அரசு வழக்கறிஞர், ‘கேரளத்திலிருந்து லாரிகளில்…

மேலும் படிக்க

வசூலில் மாஸ் காட்டும் PUSHPA 2 –

அல்லு அர்ஜூன் நடிப்பில் கடந்த 2021-ஆம் ஆண்டு வெளியாகி, சக்கைப்போடு போட்ட படம் புஷ்பா. சுகுமார் இயக்கிய இப்படத்தில் நடிகர் அல்லு அர்ஜூன் செம்மரக் கடத்தல் காரனாக நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். இப்படத்தில் மலையாள நடிகர் பகத் ஃபாசில் வில்லனாக நடித்திருந்தார். இப்படம் இந்திய அளவில் ஹிட் அடித்தது. மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் சுமார் ரூ.350 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகியது. இப்படத்தை மைத்ரீ மூவி மேக்கர்ஸ் நிறுவனம்…

மேலும் படிக்க

பத்திரிகையாளரை தாக்கிய வழக்கில் ஜாமீன் மறுப்பு

பிரபல தெலுங்கு நடிகர் மோகன் பாபு. இவருக்கு விஷ்ணு மஞ்சு, மனோஜ் மஞ்சு என்கிற இரண்டு மகன்களும், லட்சுமி மஞ்சு என்ற மகளும் உள்ளனர்.கடந்த சில நாட்களாக நடிகர் மோகன்பாபுவுக்கும் மகன் மனோஜ் மஞ்ஜுவுக்கும் இடையே சொத்து பிரச்சினை இருந்து வருவதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, இருவரும் மாறி மாறி தொடர்ந்து போலீசில் புகார் அளித்து வருகின்றனர். இந்த சூழலில் கடந்த புதன் கிழமையன்று(11.12.2024) மனோஜ் மஞ்சு, மோகன் பாபு வீட்டிற்குள் சில ஆட்களுடன் நுழைய முயன்றிருக்கிறார். ஆனால்.மோகன்…

மேலும் படிக்க

ராகுல் காந்தி ‘அருகே வந்து கத்தினார்’ பெண் எம்.பி. புகார்

அம்பேத்கர் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற வளாகத்தில் பா.ஜ.க. எம்.பி.க்கள் மற்றும் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் என இரு தரப்பினரும் மாறி மாறி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தின்போது இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் மற்றும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க. எம்.பி.க்கள் பிரதாப் சந்திர சாரங்கி மற்றும் முகேஷ் ராஜ்புத் ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது. காங்கிரஸ் கட்சியின் மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தி தன்னை தள்ளிவிட்டதாக பிரதாப் சந்திர சாரங்கி பரபரப்பு குற்றச்சாட்டை…

மேலும் படிக்க

காணாமல் போன 2 பேரை தேடும் கடற்படை !

மும்பையில் நேற்று மாலை கேட்வே ஆப் இந்தியா பகுதியில் இருந்து எலிபாண்டா தீவுக்கு சுற்றுலா பயணிகளை ஏற்றிக்கொண்டு நீல் கமல் என்ற பயணிகள் படகு சென்றது. அப்போது, கட்டுப்பாட்டை இழந்து அதிவேகமாக வந்த கடற்படை படகு, பயணிகள் படகின் மீது மோதியது. இதில் இரு படகும் சேதமடைந்து மூழ்கின. படகுகளில் இருந்தவர்கள் கடலில் விழுந்து தத்தளித்தனர். இதையடுத்து கடற்படை மற்றும் கடலோர காவல் படையினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் கடற்படை வீரர்,கடற்படை…

மேலும் படிக்க

“என்னுடைய வெற்றிக்கு தமிழ்நாடு அரசின் பங்கு மிக முக்கியமானது”~ உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற குகேஷ்..!!! 

உலக செஸ் சாம்பியன் குகேஷுக்கு தமிழ்நாடு அரசு சார்பில், சென்னை கலைவாணர் அரங்கில் பாராட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், முன்னாள் உலக செஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.இளம் செஸ் சாம்பியனாக வெற்றி பெற வேண்டும் என்ற எனது கனவு நிறைவேறியுள்ளது. தமிழ்நாடு அரசின் நிதியுதவி எனது வெற்றி பயணத்துக்கு உறுதுணையாக இருந்தது. வெற்றியுடன் திரும்பும் போதெல்லாம் முதலமைச்சர் வாழ்த்துவது மகிழ்ச்சி…

மேலும் படிக்க

Pushpa 2 ~ தாயை தொடர்ந்து மகனும் உயிரிழந்த சோகம்..!!

அல்லு அர்ஜூன் நடிப்பில் உருவான ‘புஷ்பா 2’ திரைப்படம் கடந்த டிச.5ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இப்படம் வெளியாவதற்கு முன்பு படத்தின் பிரீமியர் காட்சி ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் டிச.4 அன்று இரவு 10.30 மணியளவில் திரையிடப்பட்டது. இதனை பார்ப்பதற்கு நடிகர் அல்லு அர்ஜூன் சந்தியா திரையரங்கிற்கு சென்றார். அப்போது அல்லு அர்ஜூனை பார்ப்பதற்காக அதிக அளவிலான ரசிகர்கள் தியேட்டரில் கூடினர்.இதனால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி குடும்பத்தினருடன் பிரீமியர் காட்சி பார்க்க வந்த ரேவதி…

மேலும் படிக்க

45 ஆயிரத்தை தாண்டிய உயிரிழப்பு !

இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பினருக்கு இடையே காசாவில் ஏறக்குறைய ஒருவருடத்திற்கு மேலாக போர் நடைபெற்று வருகிறது. ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் ஒழித்துக் கட்டப் போவதாக சூளுரைத்த இஸ்ரேல், காசா பகுதியை முற்றுகையிட்டு அங்கு வான்வழியாகவும், தரைவழியாகவும் தாக்குதல் நடத்தி வருகிறது. இதன் ஒருபகுதியாக ஹமாஸின் தலைவர் இஸ்மாயில் ஹனியேவை ஈரானில் வைத்து இஸ்ரேல் கொலை செய்தது. இதனைத் தொடர்ந்து ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவரான ஹஸன் நஸ்ரல்லாஹ் வீட்டின் மீது ஏவுகணை தாக்குதலை நடத்திய இஸ்ரேல் அவரையும் கொலை…

மேலும் படிக்க

“ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை இந்தியா உறுதியாக எதிர்க்கும்” –

“இந்தியாவின் பன்முகத்தன்மையையும் ஜனநாயகத்தையும் கொன்றொழித்து, ஒற்றையாட்சி முறை எனும் பேரழிவுக்குள் நாட்டைத் தள்ளிவிடும் என்பதால், கூட்டாட்சியியலுக்கு எதிரானதும், நடைமுறைச் சாத்தியமற்றதுமான ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டத்தை இந்தியா உறுதியாக எதிர்க்கும்! அதிபர் தேர்தல் நடத்துவது போல பொதுத்தேர்தல்களை நடத்தும் உள்நோக்கத்துடன் இத்திட்டத்தை ஒன்றிய பாஜக அரசு திணிக்கிறது. இது நமது அரசியலமைப்பின் ஆன்மாவுக்கு எதிரானதாகும். நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்த முன்மொழியப்பட்டுள்ள இந்த சட்டமுன்வடிவு நிறைவேற்றப்பட்டு, செயல்பாட்டுக்கு வந்தால் நமது அரசியலமைப்பை வடித்துத் தந்தோர் நம் நாடு அராஜகத்துக்குள்ளும்…

மேலும் படிக்க
WhatsApp
YouTube
Instagram
Telegram