நடிகர் ‘சூர்யா’ உள்ளிட்டோருக்கு இயக்குநர் ‘அமீர்’ நன்றி தெரிவித்தார்..!!
இயக்குநர் அமீர் இயக்கத்தில் வெளியான பருத்திவீரன் திரைப்படத்தால் எழுந்த சர்ச்சை இன்னும் முடிவுக்கு வராமல் இருக்கிறது. இப்படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, அமீர் தன் பணத்தைப் பொய் கணக்குக் கூறி திருடிவிட்டார் எனக் கடும் குற்றச்சாட்டை வைத்தார். இதைத் தொடர்ந்து, அமீருக்கு ஆதரவாக இயக்குநர்கள் பாரதிராஜா, கரு.பழனியப்பன், சசிகுமார், சமுத்திரகனி உள்ளிட்ட பலரும் அறிக்கை வெளியிட்டனர். அதன் பின், ஞானவேல் ராஜா வருத்தம் தெரிவித்தார். ஆனாலும், பொதுவெளியில் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என அமீர் தரப்பினர்…