வித்தியாசமாக ரொட்டியை கழுவி சாப்பிடும் பெண்..!!
பொதுவாக இரவு உணவில் மீதம் உள்ள உணவை மறுநாள் மீண்டும் சூடுபடுத்தி உண்ணுவது பொதுமக்களின் பொதுவான நடைமுறையில் இயல்பாக இருந்து வருகிறது. அந்த வகையில், பாகிஸ்தான் நாட்டின் கராச்சியைச் சேர்ந்த அலிஷே என்ற பெண் மீதமிருந்த இரவு உணவான நானைக் தண்ணீரில் கழுவி மீண்டும் சூடுபடுத்தினார்.அவ்வாறு தண்ணீரில் கழுவி சூடுபடுத்தினால், மென்மையாக இருக்கும் என அந்த பெண் தெரிவித்தார். இது குறித்து அந்த பெண் ஒரு வீடியோ பதிவை கடந்த டிசம்பர் 28 ஆம் தேதி பதிவிட்டார். …