விஷச்சாராய விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை வேண்டும் ~ எடப்பாடி பழனிசாமி..!!
கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்ததில் பலர் உயிரிழந்த சம்பவம் கடந்த இரண்டு நாட்களாக தமிழகத்தையே உலுக்கி வருகிறது. பரபரப்பான அரசியல் சூழலில் தமிழ்நாடு சட்டப்பேரவையின் 2-வது நாள் கூட்டம் இன்று தொடங்கியது. அதிமுக, பாமக உறுப்பினர்கள் கருப்புச்சட்டை அணிந்து சட்டப்பேரவைக்கு வந்தனர். தொடர்ந்து கூட்டத்தொடர் தொடங்கியதும் விஷச் சாராய விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அமளியில் ஈடுபட்டனர். கேள்வி நேரத்தை ஒத்தி வைக்கக் கோரி அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சட்டப்பேரவையில் அமளியில் ஈடுபட்டனர். அதிமுக எம்.எல்.ஏ.க்கள்…