தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்பு இறுதி கட்ட பணி..!!
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தாலுகாவிற்கு உட்பட்ட முருக்கம்பட்டு, தாழவேடு, அருங்குளம் ஆகிய பகுதியில் வீடுகள் இல்லாத, பொருளாதாரத்தில் நலிவுற்ற மக்களுக்கு பிரதம மந்திரியின் அனைவருக்கும் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் அனைத்து வசதிகளுடன் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன. முருக்கம்பட்டு பகுதியில் 4 மாடிகளில் 1,040 குடியிருப்புகள் ரூ.135.22 கோடி செலவில் கட்டப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு குடியிருப்பும் ரூ.13 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்படுகின்றன. இதில் ரூ.7 லட்சம் தமிழ்நாடு…