டிக்கெட்டிலும், அடையாள அட்டையிலும் வெவ்வேறு பெயர்கள் இருந்ததால் மதுரை செல்ல வந்த பயணியின் பயணத்தை ரத்து செய்து விமான நிறுவன அதிகாரிகள் திருப்பி அனுப்பினர்..!!
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து மதுரை செல்வதற்காக மதுரையை சேர்ந்த சர்மேஷ் கான் என்பவர் வந்தார். மாலை 4.55 மணிக்கு செல்லக்கூடிய விமானத்தில் டிக்கெட் ஆன்லைன் மூலமாக எடுத்திருந்தார். சென்னை விமான நிலைய புறப்பாடு பகுதியில் மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரிகள் விமான டிக்கெட்டை பரிசோதித்து விட்டு சர்மேஷ்கானை உள்ளே அனுமதித்தனர். உள்ளே சென்ற சர்மேஸ்கான், டிக்கெட் புக்கிங் அலுவலகத்துக்கு சென்று ஆன்லைன் டிக்கெட்டை பிரிண்ட் அவுட் எடுத்து வைத்து இருந்தார்.அவர் விமானத்தில் ஏறுவதற்கு…