கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருதய செயலிழப்புடன் அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணிக்கு 35 நாள் செயற்கை சுவாசத்துடன் 80 நாள் தீவிர சிகிச்சை..!!
கிருஷ்ணகிரி மாவட்டம் தளி ஒன்றியத்துக்கு உட்பட்ட தேவகானபள்ளி கிராமத்தைச் சேர்ந்த 26 வயது மதிக்கத்தக்க பெண் 36 வார கர்ப்பத்துடன் எந்த ஒரு அசைவும் இன்றி இருதய செயலிழப்புடன், கர்ப்ப கால வலிப்பு நோய், உயர் ரத்த அழுத்தம், ரத்தசோகை உள்ளிட்ட பிரச்னைகளுடன் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஜூலை 9ஆம் தேதி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் உயிர்காக்கும் முதலுதவி செய்து சேர்க்கை சுவாசம் அளித்து உடனடியாக அறுவை சிகிச்சை…