இந்திய கோடீஸ்வரர்கள் பட்டியலில் : மீண்டும் முதலிடத்தில் முகேஷ் அம்பானி..!!
போர்ப்ஸ் இதழ் இந்திய கோடீஸ்வரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி 92 பில்லியன் டாலர் (ரூ.7.63 லட்சம் கோடி) சொத்து மதிப்புடன் முதல் இடம் பிடித்துள்ளார். கவுதம் அதானி இரண்டாம் இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளார். அவரது சொத்து மதிப்பு 68 பில்லியன் டாலராக (ரூ.5.64 லட்சம் கோடி) உள்ளது. ஹிண்டன்பர்க் அறிக்கையால் அதானி சொத்து மதிப்பு சரிந்துள்ளதாக போர்ப்ஸ் இதழ் குறிப்பிட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம்…