பெங்களூரு வீரபத்திரா நகரில் உள்ள பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனியார் பேருந்துகள் தீப்பிடித்து எரிந்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது..!!

கர்நாடக மாநிலம், பெங்களூரு வீரபத்ர நகரில் உள்ள பேருந்து பணிமனையில் இன்று காலை 10-க்கும் மேற்பட்ட தனியார் பேருந்துகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.  இந்த நிலையில்,  திடீரென்று ஒரு பேருந்து தீப்பிடித்து எரிந்த நிலையில், தீ மளமளவென பரவி அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மற்ற பேருந்துகள் எரியத் தொடங்கியது.இதுகுறித்து சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு ஏதும் நிகழவில்லை என்றாலும், 10 பேருந்துகள் எரிந்து சேதமடைந்தன. மேலும்,…

மேலும் படிக்க

உத்தரப்பிரதேசத்தில் டெங்கு பாதிப்பு 1,700-ஐ தாண்டியுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது..!!

லக்னோவில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் 37 பேருக்கு தொற்று பதிவாகியுள்ளன. ஐஷ்பாக்,  அலிகஞ்ச்,  சந்திரா நகர்,  கோசைங்கஞ்ச்,  இந்திரா நகர்,  சின்ஹாட்,  ககோரி, என்கே சாலை,  செஞ்சிலுவைச் சங்கம்,  சில்வர் ஜூபிலி மற்றும் துரியாகஞ்ச் பகுதிகளின் சமூக சுகாதார மையங்களிலிருந்து வழக்குகள் பதிவாகியுள்ளன. டெங்கு பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை மேற்கொண்டு வருவதாக தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் மனோஜ் அகர்வால் தெரிவித்தார். அவர்களை கண்காணித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.  டெங்கு பரவலைக் கட்டுப்படுத்த மாவட்டத்தின் பல்வேறு…

மேலும் படிக்க

சர்வதேச அளவில் விருதுகளை அள்ளி குவித்த ‘கூழாங்கல்’ திரைப்படம்..!!

வினோத்ராஜா இயக்க விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவின் ரவுடி பிக்சர்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது. பொட்ட காட்டில் வசிக்கும் குடும்பம் அந்த குடும்பம் சந்திக்கும் பிரச்னைகளை அடிப்படையாக வைத்து எடுத்திருக்கும் சின்ன பட்ஜெட் திரைப்படம் எப்படி உள்ளது என்பது குறித்து பார்க்கலாம்.மதுபழக்கத்திற்கு மிகவும் அடிமையான கணபதி (கருத்தடையான்) என்ற நபர் தண்ணீர் பஞ்சத்துடன் உள்ள வறண்ட பகுதியில் வாழ்ந்து வருகிறார். தன்னுடைய மனைவியோ கோபித்து கொண்டு அவரது அம்மா வீட்டிற்கு சென்றுவிடுகிறார். இந்நிலையில், தனது மகனை (செல்லப்பாண்டி) பள்ளியில்…

மேலும் படிக்க

ஈரோட்டில் கூலி தொழிலாளர்களிடம் இருந்து வாரம் மற்றும் மாத சீட்டுகள் மூலம்சுமார் ‘ஒரு கோடி’ ரூபாய் பணத்தை வசூல் செய்த பெண் திடீரென தலைமறைவு..!!

ஈரோடு கருங்கல்பாளையத்தை அடுத்த ராமமூர்த்தி நகரில் வசித்து வந்தவர் கலா.இவரது கணவர் செல்வராஜ்,  ஈரோடு மார்கெட்டில் பழக்கடை வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் கலா நடத்தி வந்த வாரச்சீட்டு,  ஆடிமாத சீட்டு மற்றும் பங்குனி மாத சீட்டுகளில்,  கக்கன்நகர்,  கிருஷ்ணம்பாளையம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட கூலி தொழிலாளர்கள்,  முதலில் 100 ரூபாய் முதல் 200 ரூபாய் வரை செலுத்தி வந்ததாக கூறப்படுகிறது.சீட்டு தொகை 500 முதல் 1000 ரூபார் வரை மாற்றப்பட்டுள்ளதாக கலா…

மேலும் படிக்க

ஆப்பிள் ஐபோன் உற்பத்தியை டாடா குழுமம் இந்தியாவில் மேற்கொள்ளவுள்ளது..!!

அமெரிக்காவின் ஆப்பிள் நிறுவனத்தின் புகழ்பெற்ற ஐபோன்களை தைவானை சேர்ந்த விஸ்ட்ரான் நிறுவனம், கர்நாடக மாநிலம் கோலாரில் உள்ள ஆலை மூலம் உற்பத்தி செய்துவந்தது. டாடா குழுமம் இந்தியாவில் ஆப்பிள் போன்களை உற்பத்தி செய்யும் நோக்கிலும் மின்னணு துறையில் கால்பதிக்கும் நோக்கிலும் இந்த ஆலையை கைப்பற்ற சமீபகாலமாக விருப்பம் தெரிவித்து வந்தது. இதற்கான பேச்சுவார்த்தை கடந்த சில மாதங்களை நடந்து வந்ததாக சொல்லப்பட்டது. அடுத்த இரண்டரை ஆண்டுகளுக்குள் டாடா குழுமம் இந்தியாவில் ஐபோன் உற்பத்தியை தொடங்கும் எனவும் அவர்…

மேலும் படிக்க

நடிகர் ‘விநாயகன்’ செய்த ‘சம்பவங்கள்’..!!

அடிக்கடி சர்ச்சை சம்பவங்களில் சிக்கும் மலையாள நடிகர் விநாயகன் இப்போதும், இதற்கு முன்பும் செய்த ‘சம்பவங்கள்’ குறித்து பார்ப்போம். அண்மையில் ரஜினி நடிப்பில் வெளியான ‘ஜெயிலர்’ படத்தில் அழுத்தமான வில்லன் நடிகராக பாராட்டப்பட்டவர் நடிகர் விநாயகன். படத்தின் வெற்றி விழாவில் நடிகர் ரஜினியே அவரது நடிப்பை பாராட்டியிருந்தார். சமூக வலைதள ‘கன்டென்ட்’களில் ரஜினியை விட விநாயகனே வியாபித்திருந்தது சமீத்திய வரலாறு. இதற்கு முன்னதாக அவர் தமிழில் ‘திமிரு’, ‘சிலம்பாட்டம்’,‘மரியான்’ உட்பட பல படங்களில் நடித்திருக்கிறார். மலையாளத்தில் வெளியான…

மேலும் படிக்க

நடிகை அமலா பால் புதிய உறவில்..!!

பிரபு சாலமன் இயக்கிய மைனா, விஜய் இயக்கிய தெய்வத்திருமகள், தலைவா, தனுஷின் வேலையில்லா பட்டதாரி, ஆடை உட்பட பல படங்களில் நடித்திருப்பவர் அமலா பால். மலையாளம், தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். இவர் இயக்குநர் விஜய்யை காதலித்து கடந்த 2014-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்குப் பின்னரும் சினிமாவில் நடித்து வந்த அமலா பால், விஜய்யுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2017-ம் ஆண்டு அவரை விவாகரத்து செய்தார். இப்போது அவர் மீண்டும் காதலில் விழுந்துள்ளார். குஜராத் மாநிலம்…

மேலும் படிக்க

அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா – உமாபதி திருமண நிச்சயதார்த்தம் இன்று..!!

நடிகர் அர்ஜுனுக்கு ஐஸ்வர்யா, அஞ்சனா என 2 மகள்கள். ஐஸ்வர்யா, விஷால் நடித்த `பட்டத்து யானை’ படம் மூலம் நடிகையாக அறிமுகமானார். தொடர்ந்து ‘சொல்லி விடவா’ என்ற படத்தில் நடித்தார். இப்போது அர்ஜுன் இயக்கத்தில் பான் இந்தியா படத்தில் நடித்து வருகிறார். இவரும் நடிகர், தம்பி ராமையாவின் மகன் உமாபதியும் காதலித்து வந்தனர்.உமாபதி, ‘அதாகப்பட்டது மகாஜனங்களே’ என்ற படம் மூலம் அறிமுகமானார். அடுத்து, ‘மணியார் குடும்பம்’, ‘திருமணம்’ ‘தண்ணி வண்டி’ உட்பட சில படங்களில் நடித்தார். இருவீட்டு…

மேலும் படிக்க

அதிகரித்து வரும் வெங்காய விலையை குறைக்க மத்திய அரசு நடவடிக்கை..!!

வெங்காய விலை சராசரியாக 57 சதவீதம் அதிகரித்துள்ளது. அதாவது, கிலோவுக்கு ரூ.47 என்றளவில் விலை உயர்ந்துள்ளது. முடைக்கால கையிருப்பை விடுவித்ததன் மூலம் வெங்காய விலையை கிலோவுக்கு ரூ.25 என்றளவில் சில்லறை விற்பனைச் சந்தையில் கிடைக்கச் செய்து நுகர்வோர் சுமையைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இதே அக்டோபர் மாதத்தில் வெங்காய விலை கிலோ ரூ.30-க்கு விற்பனையானது என்று நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இன்று (அக்.27) டெல்லியில் ஒரு கிலோ வெங்காயம் கிலோ…

மேலும் படிக்க

“நாங்கள் எந்த திரைப்பட விழாக்களுக்கு அனுப்பினாலும் ஏதாவது ஒரு விருதை வாங்கி கொண்டு வாங்கிவிடுகிறது” என ‘கூழாங்கல்’ படம் குறித்து விக்னேஷ் சிவன்..!!

ரௌடி பிக்சர்ஸ் – நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தயாரித்து இயக்குநர் பி.எஸ் வினோத் ராஜ் இயக்கத்தில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையில் உருவான படம் கூழாங்கல். கூழாங்கல் படத்தின் படக்குழுவினர் கலந்து கொண்ட செய்தியாளர் சந்திப்பு சென்னை சாலிகிராமம் பிரசாத் லேப்பில் நடைபெற்றது. இந்தநிகழ்ச்சியில் இயக்குநர்கள் விக்னேஷ் சிவன் & பி.எஸ் வினோத் ராஜ் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.  இது எங்கள் முதல் படம். ரௌடி பிக்சர்ஸ் நிறுவனத்தின் மூலமாக வித்தியாசமான, புதுமையான…

மேலும் படிக்க
WhatsApp
YouTube
Instagram
Telegram