இஸ்ரேல் பாலஸ்தீனம் இடையே போர் நடைபெற்று வரும் நிலையில் அகதிகள் முகாமில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 50 பேர் உயிரிழந்துள்ளனர்..!!

அக்டோபர் 7 அன்று,  ஹமாஸ் போராளிகள் இஸ்ரேலிய எல்லையைக் கடந்து திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து இஸ்ரேலும் பதிலடியாக தாக்குதலை தொடர்ந்தது. இந்த தாக்குதலில் பல அப்பாவி குடிமக்கள் , குழந்தைகள் , பெண்கள் உட்பட பலரும் உயிரிழந்துள்ளனர்.  நீடித்துவரும் இப்போரில் இஸ்ரேல் படையினர் காஸா எல்லைக்குள் தரை வழியாக நுழைந்துள்ளனர். வான் வழி, கடல் வழி தாக்குதல்களைத் தொடர்ந்து தரை வழியாக நடத்தப்படும் இந்தத் தாக்குதலை இஸ்ரேல் – ஹமாஸ் போரின் 2-ம் கட்டம்…

மேலும் படிக்க

போதிய பேருந்து வசதி இல்லாததால் பள்ளி மாணவர்கள் பட்டிக்கட்டில் நின்று  ஆபத்தான நிலையில் பயணம்..!!

சேலம் மாவட்டம் கெங்கவல்லி அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கூடமலை,  கிருஷ்ணாபுரம்,  கடம்பூர்,  தண்ணீர்பந்தல்,ஆணையம்பட்டி,  புதூர்,  நடுவலூர்,  ஒதியத்தூர்,  பள்ளக்காடு ஆகிய பகுதிகளில்இருந்து சுமார் 1500 க்கும் மேற்பட்ட மாணவ,  மாணவிகள் 6ம் வகுப்பு முதல் 12ம்வகுப்பு வரை கல்வி பயின்று வருகின்றனர்.  இதனிடையே காலையில் பள்ளிக்கு வரும்மாணவர்களுக்கு போதிய பேருந்து வசதிகள் இல்லாததால் பேருந்தின் படிக்கட்டில்நின்றபடி ஆபத்தான பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர், இந்நிலையில்,  இன்று காலை தம்மம்பட்டியில் இருந்து கெங்கவல்லி வழியாக ஆத்தூர்நோக்கி சென்ற…

மேலும் படிக்க

புதுச்சேரி விடுதலை நாள் கொண்டாட்டம்..!!

புதுச்சேரி யூனியன் பிரதேசம் கிட்டத்தட்ட 300 ஆண்டுகள் பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருந்த நிலையில்,  1954 ஆம் ஆண்டு நவம்பர் 1-ம் தேதி புதுச்சேரிக்கு விடுதலைகிடைத்தது.  இந்நிலையில் புதுச்சேரி விடுதலை திருநாள் இன்று அரசு சார்பில் கடற்கரை சாலையில் கொண்டாடப்பட்டது.  விடுதலை நாளையொட்டி கடற்கரை சாலையில் நடைபெற்ற விழாவில் முதலமைச்சர் ரங்கசாமி தேசிய கொடியை ஏற்றி வைத்தார். அதனைத் தொடர்ந்து காவல்துறையின் பல்வேறு படைப்பிரிவினவரின் அணிவகுப்பு மரியாதையையும் ஏற்றுக்கொண்டார். பின்னர் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.  நிகழ்ச்சியில்…

மேலும் படிக்க

இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடித்து திரைக்கு வர உள்ள தங்கலான் படத்தின் டீசர் வெளியானது..!!

பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு பிறகு நடிகர் விக்ரம் இயக்குநர் பா.ரஞ்சித்துடன் இணையும் படம் ‘தங்கலான்.  பா.ரஞ்சித்தின் தனது  ‘நட்சத்திரம் நகர்கிறது படத்திற்கு பிறகு இந்தப் படத்தை இயக்குகிறார்.   இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார்.  இப்படத்தில் நடிகை பார்வதி, மாளவிகா மோகனன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.இந்தப் படப்பிடிப்பின்போது நடிகர் விக்ரமின் விலா எலும்பில் பாதிப்பு ஏற்பட்ட நிலையில், அவர் சிகிச்சை பெற்று வந்தார். இதனால் சென்னையில் படப்பிடிப்பு தொடங்குவதில் காலதாமதம் ஏற்பட்டது. NEWS EDITOR : RP

மேலும் படிக்க

காசாவில் இன அழிப்பு நடப்பதாகவும் அதனைத் தடுக்க ஐ.நா. தவறிவிட்டதாகவும் கூறி மனித உரிமைகள் ஆணையத்தின் இயக்குநர் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்..!!

இஸ்ரேல் – ஹமாஸ் போர் தொடங்கி 26 நாட்கள் ஆகிவிட்ட நிலையில் நேற்று காசாவின் ஜபாலியா அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியன.  கடந்த அக்டோபர் 7-ம் தேதி இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு முக்கிய மூளையாக செயல்பட்ட ஹமாஸ் மத்தியப் பிரிவு கமாண்டர் இப்ரஹிம் பியாரியுடன் சேர்த்து நிறைய ஹமாஸ் அமைப்பினர் வீழ்த்தப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை உறுதி செய்துள்ளது.மேலும் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள தெற்குப் பகுதிக்குச்…

மேலும் படிக்க

இந்தியா – வங்கதேசம் இடையே ரயில் சேவை தொடக்கம்..!!

15 கிலோமீட்டர் தூரத்துக்கு இந்தியாவின் அகர்தலா முதல் வங்கதேசத்தில் உள்ள அகவுரா வரை ரயில் பாதை போடப்பட்டுள்ளது. இதில் 5 கிலோ மீட்டர் இந்தியாவிலும், 10 கிலோமீட்டர் வங்கதேசத்திலும் ரயில் பாதை இருக்கும். 2 நாடுகளுக்கு பயணிகள் மற்றும் சரக்குகள் பரிமாற்றத்துக்காக இந்த ரயில் பாதை உருவாக்கப்பட்டுள்ளது.இந்த ரயில் பாதை வடகிழக்கு மாநிலங்கள் குறிப்பாக திரிபுரா, அசாம், மிசோரம் ஆகியவை வழியாக கொல்கத்தா செல்லவும் பயன்படும் என்பது குறிப்பிடத் தக்கது. இந்த ரயில் பாதைத் திட்டத்தை பிரதமர்…

மேலும் படிக்க

வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.101 உயர்த்தப்பட்டுள்ளது..!!

சர்வதேச கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் வீட்டு பயன்பாடு மற்றும் வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. உக்ரைன் – ரஷ்யா போர் தொடங்கியதையடுத்து, கச்சா எண்ணெய் விலை அதிகரித்து, பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் ஆகியவற்றின் விலை பன்மடங்கு உயர்ந்தது. எனினும், கச்சா எண்ணெய் விலை குறையத் தொடங்கியதையடுத்து, கடந்த 4 மாதங்களுக்கும் மேலாக பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை உயர்த்தப்படவில்லை.இஸ்ரேல் – ஹமாஸ்…

மேலும் படிக்க

விசா இல்லாமல் தாய்லாந்திற்குச் செல்ல முடியும்..!!

இந்தியர்கள் இப்போது 30 நாட்களுக்கு விசா இல்லாமல் தாய்லாந்திற்குச் செல்ல முடியும், இந்த சேவை அடுத்த நவம்பர் 2023 முதல் மே 2024 வரை நீடிக்கும். சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக செப்டம்பரில், சீன சுற்றுலா பயணிகளுக்கான விசா தேவையை தாய்லாந்து ரத்து செய்தது. சீன சுற்றுலா பயணிகள் அதிக அளவில் தாய்லாந்து செல்கின்றனர். தற்போது தாய்லாந்தில் இந்தியர்களுக்கு விசா ஆன் அரைவல் வசதி உள்ளது. அரசாங்க புள்ளிவிபரங்களின்படி, ஜனவரி முதல் அக்டோபர்…

மேலும் படிக்க

முதியவரிடம் கூகுள் பே மூலம் ரூ.88000  மோசடி செய்தவரை ஜார்கண்ட் மாநிலம் சென்று போலீசார் கைது..!!

சென்னையை சேர்ந்த முதியவர் ஒருவர் தனது மகளுக்கு கூகுள் பே இணையதளம் மூலமாக பணம் அனுப்ப முயற்சி செய்துள்ளார்.   அப்பொழுது அந்த பரிவர்த்தனை ரத்து செய்யப்பட்டது.   உடனடியாக அவர் கூகுள் பே வாடிக்கையாளர் எண்ணிற்கு தொடர்பு கொண்டு உள்ளார்.   அவர்கள் முதியவரின்  தகவல்களை கேட்டு பெற்றுள்ளனர்.  அதன் பிறகு அவருடைய செல்போன் எண்ணிற்கு குறுஞ்செய்தி ஒன்று வந்துள்ளது.   அதில் ரூ.88000 வரை டெபிட் ஆகியுள்ளதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இந்நிலையில் முதியவர்,  அண்ணா சாலை காவல் நிலையத்தில் புகார்…

மேலும் படிக்க

டெல்லியில் காற்று மாசுபாடு அதிகரிக்கும் நிலையில் நாளை முதல் டீசல் வாகனங்கள் தடை செய்யப்படவுள்ளது..!!

தலைநகர் டெல்லியில் அதிகரிக்கும் காற்று மாசுபாட்டை தவிர்க்க, காற்று தர மேலாண்மை ஆணையம் பிஎஸ் III (BS III) மற்றும் பிஎஸ் IV (BS IV) வகை டீசல் பேருந்துகளை நாளை முதல் டெல்லி மாநகரில் இயக்க தடை விதித்துள்ளது. பிஎஸ் VI (BS VI) வகை சிஎன்ஜி (CNG இயற்கை எரிவாயு), மின்சாரம், மற்றும் டீசல் பேருந்துகள் மட்டும் இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த விதிமுறை தனியார் பேருந்துகளுக்கும் பொருந்தும். இந்த விதிமுறையின் மூலம் 60…

மேலும் படிக்க
WhatsApp
YouTube
Instagram
Telegram