தமிழ்நாட்டில் பருவ காலத் தொற்று அதிகரித்து வருவதால் பொதுமக்கள் முகக்கவசம் அணியுமாறு சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது..!!
டெங்கு காய்ச்சலுடன், பருவ காலத்தில் பரவும் இன்ஃப்ளூயன்ஸா தொற்றும் தீவிரமடைந்து வருவதால் பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து வெளியே செல்லுமாறு பொது சுகாதாரத் துறை வலியுறுத்தியுள்ளது. அதேபோன்று, பருவ கால தொற்றுகளுக்கு சிகிச்சையளிக்கும் வகையில் நோயின் தீவிரத்தைப் பொருத்து நோயாளிகளை வகைப்படுத்தி கண்காணிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அனைத்து மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கும் பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: அவை நேரடியாக நுரையீரலைப் பாதிக்கக் கூடியது. இருமல், தொண்டை அலர்ஜி, காய்ச்சல், உடல்…