தென் தமிழகத்தில் மீண்டும் மழைக்கு வாய்ப்பு : வானிலை மையம்..!!

வங்கக்கடலில் கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும்,  உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்  டிச.27 முதல் வரும் ஜன. 2ம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.மேலும் வரும் டிச.31ம் தேதி கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதிகபட்ச…

மேலும் படிக்க

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பல்வேறு பிரிவினருக்குத் தேவையான உதவிகள் பட்டியலிடப்பட்டு அதற்கான அறிக்கையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது..!!

ஊரக வளர்ச்சித் துறை மூலம் முழுவதுமாக சேதமடைந்த வீடுகளை மீண்டும் புதிதாகக் கட்டுவதற்கு ரூ.4 லட்சம் வழங்கிடவும், பகுதி சேதமடைந்த வீடுகளுக்கு தலா ரூ.2 லட்சம் வரை வழங்குவது என உத்தரவிடப்பட்டுள்ளது. இத்திட்டம் திருவள்ளூர், காஞ்சிபுரம் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களிலும் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தின் மூலம் மொத்தம் 385 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 4577 புதிய வீடுகள் கட்டப்படும் மற்றும் 9975 வீடுகளுக்கு பழுது நீக்கம் பணிகள் மேற்கொள்ளப்படும். பயிர்ச்சேத நிவாரணம் ரூ.250 கோடி தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி…

மேலும் படிக்க

தமிழ்நாட்டில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட பாலிசிதாரர்களுக்கு சிறப்பு சலுகை : எல்ஐசி நிறுவனம்..!!

மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பாலிசிதாரர்களுக்கு சிறப்பு சலுகைகள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, பாதிக்கப்பட்ட பாலிசிதாரர்கள் தாமதமாகும் தவணைத்தொகைக்கான அபராத தொகையை செலுத்த தேவையில்லை.  மேலும்,  இறப்புரிமங்களை கோருவதற்கான விதிகளும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி, விண்ணப்பம் மற்றும் இறப்புக்கான எளிய ஆதாரம் போதுமானது; போலீஸ் , பிரேத பரிசோதனை அறிக்கை தேவையில்லை.

மேலும் படிக்க

நடிகர் விஜயகாந்தின் உடல் தேமுதிக அலுவலகத்தில் அடக்கம் செய்யப்படும்..!!

நடிகரும்,  தேமுதிக தலைவருமான விஜயகாந்த் நேற்று காலை 9:30 மணி அளவில் உயிரிழந்ததாக மருத்துவமனை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.  இதனைத் தொடர்ந்து சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டது. இதன் பின்னர் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. தேமுதிக அலுவலகத்தில் விஜயகாந்த் உடலுக்கு திரை பிரபலங்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர். இதனைத் தொடர்ந்து,  விஜயகாந்த் உடல் இன்று அதிகாலை 4 மணி அளவில் தேமுதிக அலுவலகத்திலிருந்து தீவுத் திடலுக்கு…

மேலும் படிக்க

ராம் இயக்கத்தில் ‘நிவின் பாலி’ நடித்துள்ள “ஏழு கடல் ஏழு மலை” திரைப்படத்தின் க்ளிம்ஸ் வீடியோ ஜனவரி 2-ம் தேதி வெளியாகும்..!! 

நீண்ட நாட்களுக்கு பின் ராம் இயக்கத்தில் நிவின் பாலி, அஞ்சலி, சூரி நடித்திருக்கும் திரைப்படம் ஏழு கடல் ஏழு மலை. யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இத்திரைப்படத்திற்கு ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்துள்ளார். மாநாடு படத்தைத் தொடர்ந்து தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது வி ஹவுஸ் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் இப்படத்தை தயாரிக்கிறார்.காதலை மையமாகக் கொண்டு உருவான இப்படம் 53வது ரோட்டர்டாம் உலகத் திரைப்பட விழாவுக்குத் தேர்வாகியுள்ளது. ஜன. 25 முதல் பிப். 4 வரை நடைபெறவுள்ள இந்தப் பட…

மேலும் படிக்க

‘சாம்சங் கேலக்சி ஏ15’ 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது..!!

தென்கொரிய நிறுவனமான சாம்சங் உலகம் முழுவதும் பல்வேறு எலக்ட்ரானிக் சாதனங்களை விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனம் ஸ்மார்ட்போன் உற்பத்தியிலும் ஈடுபட்டு வருவது உலகறிந்த செய்தி. தங்களது வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அவ்வப்போது புது புது மாடல் போன்களை சாம்சங் நிறுவனம் அறிமுகம் செய்வது வழக்கம். இந்நிறுவனத்தின் கேலக்சி சீரிஸ் போன்கள் உலக அளவில் பிரபலம். அந்த வகையில் தற்போது சாம்சங் கேலக்சி ஏ15 ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது.

மேலும் படிக்க

பல்வேறு வகையான அடக்குமுறையை மாற்று இனத்தவர் தங்கள் மீது செய்தவதாக கண்ணீருடன் குறவர் இன மக்கள் புகார்..!!

சித்தோடு அருகே லட்சுமி நகர் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலை பாலத்தின் கீழ் பகுதியில் வீடுகள் இன்றி நாடோடி மக்களாக வாழ்ந்து வந்தவர்கள் குறவர் சமூக மக்கள்.  வீடுகள் கூட்ட பயன் படும் விளக்குமாறு செய்வது,  வீடுகளில் பயன்படுத்தும்எரிவாயு அடுப்புகளை சரி செய்வது என கிடைக்கும் தொழிலை செய்து தங்களதுவாழ்க்கையை நடத்தி வந்த குறவர் சமூக மக்களுக்கு பல்வேறு கட்ட போராட்டங்களுக்கு பின்பு சித்தோடு அருகே உள்ள கன்னிமார் காடு பகுதியில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் 25க்கும்…

மேலும் படிக்க

விஜயகாந்த் மறைவுக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் பிரகாஷ்ராஜ் ஆகியோர் இரங்கல்..!!

ரஹ்மான் தனது எக்ஸ் தள பக்கத்தில், “திரைத்துறையில், கதாநாயகனாக தான் உண்ணும் அதே தரமான உணவே எல்லோருக்கும் வழங்கப்பட வேண்டும் என்று போராடி வென்றார். பசியாற்றிய வள்ளல் என்று இன்று எல்லோரும் அவரைப் ரஹ்மான் தனது எக்ஸ் தள பக்கத்தில், “திரைத்துறையில், கதாநாயகனாக தான் உண்ணும் அதே தரமான உணவே எல்லோருக்கும் வழங்கப்பட வேண்டும் என்று போராடி வென்றார். பசியாற்றிய வள்ளல் என்று இன்று எல்லோரும் அவரைப் புகழ்வது நெகிழ்ச்சியாக இருக்கிறது. #RIPCaptainVijayakanth” என பதிவிட்டுள்ளார். அதேபோல…

மேலும் படிக்க

தங்கம் விலை உயர்வு..!!

தங்கம் விலை நேற்று அதிகரித்தது. இதன்படி, ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.5 அதிகரித்து ரூ.5,900-க்கும், பவுனுக்கு ரூ.40 அதிகரித்து ரூ.47,200-க்கும் விற்பனையானது. இதேபோல், 24 காரட் சுத்தத் தங்கத்தின் விலை பவுன் ரூ.50,960 ஆக இருந்தது. ஒரு கிராம் வெள்ளி நேற்று ரூ.80.70-க்கு விற்பனையானது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை நேற்று ரூ.80,700 ஆக இருந்தது. 

மேலும் படிக்க

தூத்துக்குடியில் உற்பத்தி செய்யப்பட்ட 40,000 டன் உப்பு,  மழை வெள்ளத்தில் கரைந்துவீணானது..!!

ஆண்டு தோறும் பிப்ரவரி மாதம் தொடங்கி நவம்பர் மாதம் வரை உற்பத்தி செய்யும் பணி நடக்கிறது.இதனையடுத்து உற்பத்தி செய்யப்பட்ட உப்பு,  உப்பளம் அருகில் சேமித்து வைக்கப்பட்டு பின்னர் விற்பனை செய்யப்படுவது வழக்கம்.   இந்தநிலையில் இந்தாண்டு உற்பத்தி செய்யப்பட்டு 40,000 டன் உப்பு சேமித்து வைக்கப்பட்டது.  இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த டிச.17, 18-ம் தேதிகளில் வரலாறு காணாத அளவிற்கு பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் சேமித்து வைக்கப்பட்ட உப்பு கரைந்து வீணானது.இதனால் சுமார் ரூ.8…

மேலும் படிக்க
WhatsApp
YouTube
Instagram
Telegram