பருவம் தவறி பெய்த கனமழையால் மரக்காணம் பகுதியில் பாதிக்கப்பட்ட உப்பு உற்பத்திக்கான முதற்கட்ட பணி தற்போது துவங்கியுள்ளது..!!
உப்பளங்களிலிருந்து ஆண்டுதோறும் சுமார் 25 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யப்பட்டு பல்வேறு மாவட்டங்களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இப்பகுதியில் ஆண்டுதோறும் டிசம்பர் மாதத்தில் உப்பு உற்பத்திக்கான முதற்கட்ட பணிகள் துவங்குவது வழக்கம். இதனைத் தொடர்ந்து, தைப்பொங்கல் அன்று முதன் முதலாக பொன் உப்பு எடுத்து சூரிய பகவானுக்கு படையல் செய்வதும் வழக்கம்.இங்கு பொதுமக்களுக்கு வேலைவாய்ப்புகள் வழங்கக்கூடிய எந்தவித தொழிற்சாலைகளும் இல்லை. இதன் காரணமாகவே இப்பகுதியில் உப்புத் தொழிலைநம்பி பல ஆயிரம் குடும்பங்கள் உள்ளது. இந்த தொழிலில்…