தேர்தல் vs தொழில்நுட்பம்..!!

கூகுளின் அல்ஃபபட் நிறுனத்திற்கு சொந்தமான  யூடியூப்  கடந்த 2005ல் தான் முதன்முதலாக உருவாக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வருகிறது. அதுவரை இணையதள போஸ்டர்கள், கட்டுரைகள், வலைப்பதிவுகள் மற்றும் தேர்தல் கணிப்புகள் என சமூக வலைதளங்களில் அரசியல் கட்சிகள் பயன்படுத்தி வந்தன. இதனைத் தொடர்ந்து வந்த யூடியூப்பையும் அமெரிக்க அரசியல்வாதிகள் கனகச்சிதமாக பயன்படுத்தி அதன் பலனை தேர்தலில் அறுவடை செய்தனர்.யூடியூப் 2005 ஆம் ஆண்டு பிப்ரவரி 14 தொடங்கப்பட்டது. இதனை  பேபால் நிறுவனத்தில் பணியாற்றிய மூன்று முன்னாள் ஊழியர்களான ஸ்டீவ்…

மேலும் படிக்க

மொபைல் உலகின் முக்கிய நிறுவனமான ஜியோமி தனது இரண்டாவது எலக்ட்ரிக் காரை அறிமுகம் செய்துள்ளது..!!

ஜியோமி நிறுவனம் பார்சிலோனாவில் நடைபெற்றுவரும் எம்டபிள்யூசி (மொபைல் வொர்ல்ட் காங்கிரஸ்) உலக மாநாட்டில் புதிய தயாரிப்பான எஸ்யூ7 செடான் காரை உலகத்துக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. அக்வா ப்ளூ எஸ்யூ7 பார்ப்பதற்கு மட்டுமில்லாமல் திறன் சார்ந்தும் முக்கிய வரவாக இருக்க போவதாக துறை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். சூப்பர்கார் ஆன மெக்லாரென் 720எஸ் போல இருக்கும் ஜியோமியின் இந்த கார் அதிகபட்சம் 265 கிமீ வேகத்தில் செல்லக் கூடியது.சீனாவைச் சேர்ந்த நிறுவனமான ஜியோமி, மொபைல் போன் மற்றும் வீட்டு உபயோக பொருள்கள்…

மேலும் படிக்க

தங்கம் விலை குறைந்தது..!!

தங்கம் விலை நேற்று குறைந்தது. அதன்படி, தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.10 குறைந்து ரூ.5,810-க்கும், பவுனுக்கு ரூ.80 குறைந்து ரூ.46,480க்கும் விற்பனையானது.24 காரட் சுத்தத் தங்கம் புவுன் ரூ.50,240-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் வெள்ளி ரூ.76-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை நேற்று ரூ.76,000 ஆக இருந்தது.

மேலும் படிக்க

தென்காசி : ரயில் விபத்து ஏற்படாமல் தடுத்து நிறுத்திய தம்பதிக்கு ரூ. 5 லட்சம் வெகுமதி அறிவித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!! 

தென்காசி மாவட்டம்,  செங்கோட்டை வட்டம்,  புளியரை கிராமம்,  ‘எஸ்’ – வளைவு என்ற தமிழ்நாடு – கேரள எல்லைப் பகுதியில்,  25-2-2024 அன்று நள்ளிரவு 1.00 மணி அளவில் திருமங்கலம்-கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் சென்ற லாரி ஒன்று நிலை தடுமாறி 40 அடி உயரத்திலிருந்து கவிழ்ந்து கீழே செல்லும் செங்கோட்டை-கொல்லம் ரயில் மார்க்கத்திலுள்ள தண்டவாளத்தில் விழுந்து விபத்து ஏற்பட்டது. அப்போது அப்பகுதியில் வசித்து வந்த சண்முகையா- வடக்குத்தியாள் தம்பதி செங்கோட்டையிலிருந்து புனலூர் நோக்கி வந்து கொண்டிருந்த பகவதியம்மன்…

மேலும் படிக்க

பாகிஸ்தான் : முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் மகள் மரியம் நவாஸ், பஞ்சாப் மாகாணத்தின் முதலமைச்சராக பதவியேற்றார்..!!

பஞ்சாப் மாகாண சட்டசபைக்கு நடந்த தேர்தலில் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றது. பாகிஸ்தான் மக்கள் கட்சி மற்றும் சுயேட்சைகள் மரியம் நவாஸ் ஷெரீபுக்கு ஆதரவு தந்தனர்.பஞ்சாப் மாகாண சட்டசபையானது முதலில் கூட்டத்தொடரை தொடங்க உள்ளது. பஞ்சாப் சட்டசபையை வெள்ளிக்கிழமை கூட்டும்படி கவர்னர் பலிகுர் ரகுமான் அழைப்பு விடுத்திருந்தார். மூன்று முறை பிரதமராக பதவி வகித்த நவாஸ் ஷெரீப் மகள் மரியம் நவாஸ் பஞ்சாப் மாகாணத்தின் முதல் பெண் முதல் மந்திரியாக தேர்வு…

மேலும் படிக்க

உதகை : எருமைகள் மீது மலை ரயில் மோதியதில் ரயிலின் ஒரு பெட்டி தடம் புரண்டு விபத்துக்குள்ளானது..!!

உதகை மலை ரயில் தினந்தோறும் மேட்டுப்பாளையத்தில் இருந்து காலை 7.10 மணி அளவில் புறப்பட்டு பகல் 12.30 மணி அளவில் உதகை சென்றடையும்.  இந்நிலையில், மேட்டுப்பாளையம்- உதகை மலை ரயில் உதகை ரயில் நிலையம் அருகே வந்தபோது தண்டவாளத்தில் நடந்து சென்ற எருமைகள் மீது மோதியது.  ரயில் மோதியதில் ஒரு எருமைமாடு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.  மற்றொரு எருமை படுகாயம் அடைந்தது. இதனால், ரயிலின் ஒரு பெட்டி தடம் புரண்டது . 

மேலும் படிக்க

பொறுப்பாளர்களை நியமிக்க விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் முடிவு செய்துள்ளது..!!

நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி 2-ல் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கினார். அப்போதே அவர் 2026 சட்டமன்றத் தேர்தலே தனது இலக்கு எனத் தெரிவித்தார்.  இந்த மக்களவைத் தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை எனவும் யாருக்கும் ஆதரவு கொடுக்க மாட்டோம் எனவும் கூறினார்.இடைப்பட்ட இந்த 2 வருடங்களில் கட்சியைப் பலப்படுத்தும் பணிகளில் ஈடுபடப் போவதாகவும் அவர் கூறினார்.  இருப்பினும் தனது ஹைஸ்பீடு அரசியலை இப்போதே தொடங்கிவிட்டார் விஜய்.  அவரது அடுத்தடுத்த அரசியல் செயல்பாடுகள் ரசிகர்கள்…

மேலும் படிக்க

அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ.வி.ராஜு நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சை கருத்துகள் பேசியதை அடுத்து, நோட்டீஸ் அனுப்பியுள்ளார்..!!

சேலம் மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளராக இருந்த ஏ.வி.ராஜு,  அண்மையில் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.  இதனையடுத்து அவர் அளித்த பேட்டியில்,  நடிகை த்ரிஷாவின் பெயரை வெளிப்படையாகக் குறிப்பிட்டு அதிமுகவை விமர்சித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களைத் தெரிவித்திருந்தார்.  இது சமூக வலைத்தளங்களில் வைரலானது.  இந்த பிரச்னைக்கு திரைப் பிரபலங்கள் பலர் கண்டனங்களைத் தெரிவித்தனர். பிரபலமான youtube பத்திரிகைகள் மற்றும் தொலைக்காட்சி நிறுவனங்களில் மன்னிப்பு கேட்கப்பட்ட வேண்டும் எனவும் கூறியுள்ளார். கடந்த 4 நாட்களாக அவதூறு கருத்தினால் மன உளைச்சலில் ஈடுபட்டுள்ளதாகவும்,  இதற்கு நஷ்ட…

மேலும் படிக்க

மீதமிருந்த ஒரு சாண்ட்விச்சை சாப்பிட்டதால் பணிநீக்கம்..!!

லண்டன், ஃபின்ஸ்பரி சர்க்கஸ் பகுதியில் டென்ஷ்ரிஸ் சொலிஸிட்டர்ஸ் என்ற நிறுவனம் செயல்பட்டு வருகிறது.  இந்த நிறுவனத்தில் ஈக்வடார் நாட்டை சேர்ந்த கேப்ரியல்லா ரோட்ரிகுயஸ் என்ற பெண், 2 ஆண்டுகளாக தூய்மைப்பணியாளராக வேலை செய்து வந்தார்.  இதனிடையே இந்த நிறுவனத்தில் அலுவலக ஆலோசனை கூட்டம் நடைபெற்ற நிலையில், அதில் கலந்துகொண்டவர்களுக்கு சாண்ட்விச் வழங்கப்பட்டது.இந்த கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் சாண்ட்விட்ச்-ஐ சாப்பிட்டுவிட்டு, மீதமுள்ளதை அங்கேயே விட்டு சென்றுள்ளனர்.  தூய்மைப்பணியாளரான கேப்ரியல்லா, அங்கு மீதம் இருந்த ஒரு சாண்ட்விச்சை எடுத்து சாப்பிட்டு…

மேலும் படிக்க

வெங்காய ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டுள்ள தடை மார்ச் 31- ஆம் தேதி வரை தொடரும்..!!

 வெங்காய ஏற்றுமதிக்கான தடையில் எந்த மாற்றமும் இல்லை என்றும், ஏற்கனவே வெளியான அறிவிப்பின்படி மார்ச் 31-ந்தேதி வரை தடை தொடரும் என்றும் மத்திய அரசின் நுகர்வோர் விவகார செயலாளர் ரோஹித் குமார் சிங் தெரிவித்துள்ளார். மேலும் நுகர்வோருக்கு நியாயமான விலையிலும்,  போதுமான அளவிலும் உள்நாட்டிலேயே வெங்காயம் கிடைப்பதை உறுதி செய்வதே அரசாங்கத்தின் நோக்கம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.உள்நாட்டில் வெங்காயம் கிடைப்பதை அதிகரிக்கவும்,  விலையை கட்டுக்குள் வைத்திருக்கவும் மத்திய அரசு வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதித்து உத்தரவிட்டது. கடந்த…

மேலும் படிக்க
WhatsApp
YouTube
Instagram
Telegram