ஹைதி நாட்டில் கனமழை, நிலச்சரிவு..!!

போர்ட்-ஆவ்-பிரின்ஸ், ஹைதி நாட்டில் கும்பல், கும்பலாக வன்முறை தாக்குதலில் ஈடுபடுதல், அரசியல் தோல்வி மற்றும் பொருளாதார தேக்கம் உள்ளிட்ட மனிதநேயம் சார்ந்த பேரிடரில் மக்கள் சிக்கி தவித்து வருகின்றனர். இந்த நிலையில், நாட்டின் தலைநகரை சுற்றியுள்ள பகுதிகள் உள்ளிட்ட நகரங்களில், திடீரென ஏற்பட்டு உள்ள தொடர் கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் சிக்கி 42 பேர் வரை பலியாகி உள்ளனர். 11 பேரை காணவில்லை. இதுபற்றி ஐ.நா. அமைப்பு வெளியிட்ட…

மேலும் படிக்க

அரிக்கொம்பன் யானை வழக்கு..!!

மதுரை, கேரள மாநிலத்தில் 10க்கு மேற்பட்ட நபர்களைத் தாக்கிக் கொன்ற அரிக்கொம்பன் என்ற காட்டு யானையினை கேரள வனத்துறையினரால் மயக்க ஊசி செலுத்தப்பட்டு தமிழக கேரள வனப்பகுதியில் துரத்தி விடப்பட்டது. இதையடுத்து கடந்த 27 ஆம் தேதி தேனி மாவட்டம் கம்பம் பகுதிக்குள் நுழைந்தது. பின்னர் அங்கு பலரது வீடு மற்றும் பொருட்களைச் சேதப்படுத்தி வந்தது. இதனைத் தொடர்ந்து கம்பம் பகுதி முழுவதும் மாவட்ட ஆட்சியர் 144 தடை உத்தரவு பிறப்பித்து இருந்தார். இதனிடையே அரிக் கொம்பன்…

மேலும் படிக்க

வெளிநாடு முதலீடுகள் குறித்த கவர்னர் ஆர்.என்.ரவி கருத்துக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கண்டனம்..!!

சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:- தமிழக அரசின் வளர்ச்சி மீது அக்கறை இல்லாதவர்கள் முதல்-அமைச்சர் வெளிநாடு பயணம் குறித்து விமர்சிக்கின்றனர். எடப்பாடி பழனிசாமி, கவர்னர் ஆர்.என்.ரவி உள்ளிட்டோர் மாநில அரசின் வளர்ச்சி குறித்து அக்கறை இல்லாதவர்கள். முதல்வரின் வெளிநாட்டு பயணத்தை விமர்சனம் செய்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு வெளியிட்ட பதில் அறிக்கை ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் பொருந்தும். வெளிநாடு முதலீடுகள் குறித்து கவர்னர் ஆர்.என்.ரவி கூறிய கருத்து கண்டனத்துக்குரியது. முதல்-அமைச்சரின் வெளிநாட்டு பயணத்தை விமர்சிக்க…

மேலும் படிக்க

தேன்கனிக்கோட்டையில் ஆசிரியர் வீட்டின் காம்பவுண்டு சுவரில் சிக்கிய 23 பாம்புகள்..!!

தேன்கனிக்கோட்டை மேல்கோட்டை விஜய நகர் பகுதியை சேர்ந்தவர் கோபி. இவர் தேன்கனிக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது வீட்டின் காம்பவுண்டு சுவரில் உள்ள துளையில் நாகப்பாம்பு புகுந்தது. இதை பார்த்து ஆசிரியர் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் வனத்துறையினர் பாம்பு பிடிக்கும் தேன்கனிக்கோட்டை ஆசாத் தெருவை சேர்ந்த வாட்ச் முபாரக் (வயது 38), புல்லட் முபாரக் (34), சையத் முஜாமில் (30) ஆகியோருடன் சென்று பாம்பை…

மேலும் படிக்க

யுனெஸ்கோ விருது பெற்ற வன அலுவலர் ஜெகதீஷ் பகனுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு..!!

சென்னை, யுனெஸ்கோ விருது பெற்ற இராமநாதபுரம் மாவட்ட வன அலுவலர் ஜெகதீஷ் பகனுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், “இராமநாதபுரம் மாவட்ட வன அலுவலரும் மன்னார் வளைகுடா உயிர்க்கோளகக் காப்பகத்தின் இயக்குநருமான திரு. ஜெகதீஷ் அவர்கள் UNESCO அமைப்பால் வழங்கப்படும் உயிர்க்கோளகக் காப்பக மேலாண்மைக்கான (#BiosphereReserveManagement) #MichelBatisseAward-க்குத் தேர்வாகி, தமிழ்நாடு வனத்துறைக்கும் அரசுக்கும் பெருமை சேர்த்துள்ளார். அவருக்கு நம் பாராட்டுகள். நமது அரசு அமைத்த Marine Elite படையால்தான் இது சாத்தியமானது…

மேலும் படிக்க

ஜெர்மனியின் பாதுகாப்பு மந்திரி இந்தியா வருகை..!!

புதுடெல்லி, ஜெர்மனியின் பாதுகாப்பு மந்திரி போரிஸ் பிஸ்தோரியஸ் இந்தியாவில் 4 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதற்காக அவர் இன்று காலை புதுடெல்லிக்கு வருகை தந்து உள்ளார். இந்தோனேசியாவில் இருந்து இந்தியா வந்த அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதன்பின், டெல்லியில் உள்ள தேசிய போர் நினைவகத்திற்கு சென்ற அவர், வீரமரணம் அடைந்த இந்திய ஆயுத படை வீரர்களுக்கு மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். இதுபற்றி இந்தியாவில் உள்ள ஜெர்மனி தூதரகம் வெளியிட்டு உள்ள செய்தியில், ஜெர்மனி நாட்டின்…

மேலும் படிக்க

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் விபத்து..!!

கிருஷ்ணகிரி ஊத்தங்கரை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் நடந்த விபத்துகளில் முன்னாள் ராணுவ வீரர் உள்பட 4 பேர் பலியானார்கள். முன்னாள் ராணுவ வீரர் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள பேயனூரை சேர்ந்தவர் அருணகிரி (வயது 37). முன்னாள் ராணுவ வீரர். இவர் மோட்டார்சைக்கிளில் பாறையூர் பக்கமாக நேற்று முன்தினம் சென்று கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக வந்த கார் மோதி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் அருணகிரி சம்பவ இடத்திலேயே…

மேலும் படிக்க

ராஜா வாய்க்காலில் மூழ்கி கல்லூரி மாணவர் பலி..!!

நாமக்கல் பரமத்திவேலூர் கல்லூரி மாணவர் தேனி மாவட்டம் சின்னமனூர் பகுதியை சேர்ந்தவர் சவுந்தரபாண்டியன். இவர் தேயிலை தோட்ட தொழிலாளி. இவரது மகன் சிரஞ்சீவி (வயது 20). இவர் பரமத்தி அருகே மேல்சாத்தம்பூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்சி. கம்ப்யூட்டர் சயின்ஸ் 2-ம் ஆண்டு படித்து வந்தார். ஜேடர்பாளையம் அருகே அரசம்பாளையத்தில் உள்ள அவருடன் படித்து வரும் சக கல்லூரி மாணவர் வாசுதேவன் என்பவரது வீட்டில் கடந்த 6 மாதமாக சிரஞ்சீவி தங்கி கல்லூரிக்கு சென்று வந்துள்ளார்….

மேலும் படிக்க

நண்பர் இறந்த அதிர்ச்சியில் உயிரை விட்ட முதியவர்..!!

திருவாரூர் நண்பர் இறந்த அதிர்ச்சியில் முதியவரும் உயிரை விட்டார். சிறுவயது முதல் இணைபிரியாமல் இருந்த நண்பர்கள் இறப்பிலும் ஒன்றாக சென்றனர். மன்னார்குடியில் நடந்த இந்த பரிதாப சம்பவம் பற்றிய விவரம் வருமாறு. சிறுவயதில் இருந்தே நண்பர்கள் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி கீழ 4-ம் தெருவில் வசித்து வந்தவர் சிவராமகிருஷ்ணன்(வயது 80). மன்னார்குடி அசேஷம் பகுதியில் வசித்து வந்தவர் ராமலிங்கம்(80). இவர்கள் இருவரின் சொந்த ஊர் மன்னார்குடியை அடுத்த தலையாமங்கலம் ஆகும். ஒரே ஊரை சேர்ந்தவர்கள் என்பதால் இவர்கள்…

மேலும் படிக்க

நாமக்கல் மண்டலத்தில் முட்டைக்கோழி விலை கிலோவுக்கு ரூ.7 குறைந்தது..!!

நாமக்கல் நாமக்கல் மண்டலத்தில் முட்டைக்கோழி கிலோ ரூ.107-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் நாமக்கல்லில் நேற்று நடந்த முட்டைக்கோழி ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில், அதன் விலையை ரூ.7 குறைக்க முடிவு செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து நாமக்கல் மண்டலத்தில் முட்டைக்கோழி ஒரு கிலோவின் விலை ரூ.100 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது இதனிடையே கறிக்கோழி விலை கிலோவுக்கு ரூ.129 ஆகவும், முட்டை கொள்முதல் விலை 515 காசுகளாகவும் இருந்து வந்தது. அவற்றின் விலைகளில் மாற்றம் ஏதும் இல்லை என பண்ணையாளர்கள் தெரிவித்தனர்….

மேலும் படிக்க
WhatsApp
YouTube
Instagram
Telegram