மாடவீதியில் சிமெண்டு சாலை அமைக்கும் பணி தொடக்கம்..!!

அருணாசலேஸ்வரர் கோவிலை சுற்றி உள்ள மாடவீதியில் சிமெண்டு சாலை அமைக்கும் பணி தொடங்கியது. திருவண்ணாமலை திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலை சுற்றியுள்ள மாட வீதியில் திருப்பதிக்கு இணையான சிமெண்டு சாலை அமைக்கப்படும் என்று சட்டமன்ற தேர்தலின் போது தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்குறுதி அளித்தார். அதன்படி மாட வீதியில் முதற்கட்டமாக பே கோபுரம் பகுதி மற்றும் பெரிய தெருவில் நெடுஞ்சாலைத்துறை மூலமாக சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம் 2021-22-யின் கீழ் ரூ.15 கோடி மதிப்பில் சிமெண்டு சாலை அமைக்கப்பட…

மேலும் படிக்க

விஜயின் மாணவர் சந்திப்பு – அரசியலை நோக்கிய அடுத்த நகர்வா…?!!

தலைவர்களுக்கு மரியாதை, தொகுதிவாரியான புள்ளி விவரம், நலத்திட்ட உதவிகள், இலவச மதிய உணவு ஆகியவற்றைத் தொடர்ந்து மாணவர்கள் சந்திப்பு என நடிகர் விஜய் மக்கள் இயக்கத்தின் அடுத்தடுத்த நிகழ்வுகள், அரசியல் களத்தில் கவனம் ஈர்த்து வருகிறது. இது அரசியலை நோக்கிய பயணம் என்றும் சொல்லப்படுகிறது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்… அரசியலுக்கு வருகிறேன் என்று நடிகர் விஜய் வெளிப்படையாக சொல்லவில்லை என்றாலும், திரைப்படங்களிலும் திரைப்பட விழாக்களிலும் அவர் பேசும் வசனங்கள் அரசியல் வருகையை சொல்வதாக ரசிகர்கள் நம்புகிறார்கள்….

மேலும் படிக்க

“கோவில்களின் வருவாய், செலவுகளை மத்திய குழு தணிக்கை செய்வதால் மாநில அரசின் உரிமை பறிக்கப்படாது..!!”

சென்னை, கோவில்களின் வருவாய், செலவுகளை மத்திய கணக்கு தணிக்கை குழு தணிக்கை செய்வதால் மாநில அரசின் உரிமை பறிக்கப்படாது என சென்னை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது . மேலும் கோவில் ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதிய சட்டத்தை அமல்படுத்த வேண்டும் .அரசியல் விருப்பங்களின் அடிப்படையில் மட்டுமே அறங்காவலர்களை நியமிக்க கூடாது” அறங்காவலர்களாக அரசியல்வாதிகளை நியமிப்பதை தவிர்க்க வேண்டும் என சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. கோவில் பாதுகாப்பு தொடர்பாக பிறப்பித்த உத்தரவுகளை மறு ஆய்வு செய்ய கோரி அறநிலையத்துறை தாக்கல் செய்த…

மேலும் படிக்க

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி..!!

லண்டன் தி ஓவன் மைதானத்தில் மதியம் 3 மணிக்கு தொடங்கிய உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. இந்திய கிரிக்கெட் அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் கடந்த இரு ஆண்டுகளாக தொடர்ச்சியாக சிறந்த திறனை வெளிப்படுத்தி வந்தது. இதன் தொடர்ச்சியாக கோப்பையை வெல்லும் கனவுடன் இந்திய அணி இறுதி போட்டியில் களம் இறங்கியுள்ளது. லண்டன் தி ஓவல் மைதானத்தில் இன்று தொடங்கியுள்ள இறுதிப்போட்டி வரும் 11…

மேலும் படிக்க

அரபிக்கடலில் உருவான ‘பிபோர்ஜோய்’ புயல் தீவிர புயலாக வலுப்பெற்றது..!!

தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடலில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றுள்ளது. இந்த புயலுக்கு ‘பிபோர்ஜோய்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. வங்கதேசம் வழங்கியுள்ள ‘பிபோர்ஜோய்’ என்ற பெயருக்கு ஆபத்து என்பது பொருளாகும். இந்த புயல் வலுப்பெற்று வடக்கு நோக்கி நகர வாய்ப்புள்ளது என்றும், இந்த புயலால் கேரளா முதல் மராட்டிய மாநிலம் வரையிலான நாட்டின் மேற்குக் கடற்கரைப் பகுதிகளில் மழை தீவிரமடையும் என்றும் வானிலை ஆய்வாளர்கள் கூறி வருகின்றனர். இந்த நிலையில்…

மேலும் படிக்க

சென்னை அருகே தண்டவாளத்தில் மரத்துண்டு – ரெயிலை கவிழ்க்க சதியா..?!!

திருவள்ளூர் அருகே திருநின்றவூரில் தண்டவாளத்தில் மரத்துண்டு கிடந்தது தொடர்பாக ரெயில்வே போலீசார் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை, சென்னை திருநின்றவூர் அருகே நள்ளிரவில் அவ்வழியே வந்த சரக்கு ரெயில் என்ஜினில் மரத்துண்டு சிக்கிய நிலையில், ஓட்டுநர் அதனை அப்புறப்படுத்தி ஆவடி ரயில்வே காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார். நள்ளிரவில் சென்ற சரக்கு ரெயில் மரத்துண்டில் சிக்கி நின்ற நிலையில் ஓட்டுநர் ரெயில்வே போலீசில் புகார் அளித்தார். ரெயில் தண்டவாளம் அருகே மரத்துணை போட்டது யார் என்பது…

மேலும் படிக்க

மீண்டும் டிரோலுக்கு ஆளாகும் ஆதிபுருஷ்…!!!

பாகுபலி படத்திற்கு பிறகு பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் படம் ஆதி புருஷ். இப்படத்தின் டீஸர் வெளியான பிறகு பல டிரோல்களை சந்தித்தது ஐதராபாத் பாகுபலி படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பின் பிரபாஸ் நடிப்பில் வெளியான சாஹோ, ராதே ஷியாம் ஆகிய படங்கள் படு தோல்வியை சந்தித்தன. தொடர் தோல்விகளில் இருந்து மீண்டு வர நடிகர் பிரபாஸ் தேர்ந்தெடுத்த திரைப்படம் தான் ஆதிபுருஷ். இராமாயணத்தை மையமாக வைத்து உருவாகி உள்ள திரைப்படத்தில் நடிகர் பிரபாஸ் ராமனாக நடித்துள்ளார்….

மேலும் படிக்க

ரூ.300 கோடியில் படமாகும் சக்திமான் தொடர்..!!

சூப்பர் ஹீரோ தொடரான சக்திமான், தூர்தர்ஷனில் 1997 முதல் 2005 வரை 8 ஆண்டுகள் 520 எபிசோடுகள் ஒளிபரப்பப்பட்டு பெரிய வரவேற்பை பெற்றது. குறிப்பாக குழந்தைகளை மிகவும் கவர்ந்தது. இதில் பண்டிட் கங்காதர் வித்யாதர் மாயாதர் ஓம்கார்நாத் சாஸ்திரி என்ற சக்திமான் கதாபாத்திரத்தில் முகேஷ் கன்னா நடித்து இருந்தார். “ஒரு தலைமுறையே பார்த்து வளர்ந்த சக்திமான் தொடரை பிரமாண்ட சினிமா படமாக தயாரிக்க இருக்கிறோம் என்றும், அது இந்த காலத்துக்கும் பொருத்தமான கதை” என்றும் முகேஷ் கன்னா…

மேலும் படிக்க

தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..!!

சென்னை, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழக பகுதியின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக, இன்று (07.06.2023) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தஞ்சாவூர், திருவாரூர். அரியலூர், பெரம்பலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, சேலம், தர்மபுரி, நாமக்கல், திருச்சிராப்பள்ளி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. (08.06.2023 முதல்…

மேலும் படிக்க

சர்க்கரை அல்லாத இனிப்புகள் தொடர்பான எச்சரிக்கை ஏற்புடையது அல்ல..!!

சர்க்கரை அல்லாத இனிப்புகள் பயன்படுத்துதல் தொடர்பாக உலக சுகாதார அமைப்பு புதிய வழிகாட்டுதல் மற்றும் எச்சரிக்கை ஒன்றை சில நாட்களுக்கு முன் வெளியிட்டது. சிலர் உடல் எடையை குறைக்க சர்க்கரை அல்லாத இனிப்புகளை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் அவற்றை நீண்ட காலம் பயன்படுத்தும் போது டைப் 2 நீரிழிவு மற்றும் இதயநோய் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படலாம் என்றும், எனவே அவற்றை பயன்படுத்துவதை பரிசீலினை செய்யுமாறும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. சுக்ரலோஸ், அஸ்பார்டேம் சாக்கரின், உள்ளிட்ட சர்க்கரை…

மேலும் படிக்க
WhatsApp
YouTube
Instagram
Telegram