மாநிலம் முழுவதும் நடந்த ‘லோக் அதாலத்’தில் 3 ஆயிரத்து 949 வழக்குகள் முடிவுக்கு வந்தன..!!

தமிழ்நாடு முழுவதும் நேற்று நடந்த ‘லோக் அதாலத்’தில் 3 ஆயிரத்து 949 வழக்குகள் முடிவுக்கு வந்துள்ளன. இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு 132 கோடி ரூபாய் கிடைத்துள்ளது என்று சட்டப்பணி ஆணைக் குழு உறுப்பினர் செயலர் நீதிபதி ஏ.நசீர் அகமது கூறினார். சென்னை தமிழ்நாட்டில் உள்ள கோர்ட்டுகளில் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வழக்குகளை விரைவாக முடிவுக்கு கொண்டுவர மாநில அளவில் ‘லோக் அதாலத்’ என்ற மக்கள் நீதிமன்றத்தை நடத்தும்படி தலைமை நீதிபதி எஸ்.வி.கங்கா புர்வாலா உத்தரவிட்டார். இதன்படி…

மேலும் படிக்க

ரூ.1.20 கோடி மதிப்பீட்டில் மெரினா காமராஜர் சாலையில் கருணாநிதி நூற்றாண்டு பஸ் நிலையம்..!!

சென்னை சென்னை மெரினா காமராஜர் சாலைக்குட்பட்ட அண்ணா சதுக்கத்தில் மத்திய சென்னை எம்.பி. தொகுதி மேம்பாட்டுத் திட்ட நிதியின் கீழ் ரூ.1.20 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட கருணாநிதி நூற்றாண்டு பஸ் நிலையத்தை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். அதனைத்தொடர்ந்து பஸ் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள தாய்மார்கள் குழந்தைகளுக்கு பாலூட்டும் அறையையும் திறந்து வைத்தார். மேலும் 15 டிரைவர்கள், கண்டக்டர்களுக்கு இலவச சீருடைகளையும் அவர் வழங்கினார். அதனைத்தொடர்ந்து…

மேலும் படிக்க

அதிதீவிர சூறாவளி புயலாக மாறியது பிபோர்ஜாய்: சௌராஷ்டிரா & கட்ச் கடற்கரைக்கு சூறாவளி எச்சரிக்கை..!!

புதுடெல்லி, தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் கடந்த ஜூன் 5ம் தேதி மாலையில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவானது. இது நேற்று வலுப்பெற்று வடக்கு திசையில் நகர்ந்து மத்திய கிழக்கு மற்றும் அதனையொட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் புயலாக வலுப்பெற்றது. இந்த புயலுக்கு வங்கதேசம் பரிந்துரைத்த ‘பிபோர்ஜாய்’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்நிலையில், ‘பிபோர்ஜாய்’ புயல். மணிக்கு 5 கிமீ வேகத்தில் வடக்கு நோக்கி நகர்வதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இது அடுத்த 6…

மேலும் படிக்க

ஸ்டான்லி கல்லூரி விடுதியில் மருத்துவ மாணவர் மயங்கி விழுந்து சாவு..!!

சென்னை கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் தனுஷ் (வயது 24). இவர், சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ். 5-ம் ஆண்டு படித்து வந்தார். ஸ்டான்லி ஆஸ்பத்திரி வளாகத்தில் உள்ள கல்லூரி விடுதியில் தங்கி, பயிற்சி எடுத்து வந்தார். நேற்று முன்தினம் விடுதியில் உள்ள அறையில் மருத்துவ மாணவர் தனுஷ் திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை சக மாணவரான ஆதித்யா என்பவர் மீட்டு ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்தார். ஆனால்…

மேலும் படிக்க

காதலியை கொலை செய்து கழிவு நீர்த் தொட்டியில் வீசிய கோவில் பூசாரி..!!

சாய் கிருஷ்ணா தன்னை ஏமாற்றுவதை உணர்ந்ததை அடுத்து அப்சரா தன்னை திருமணம் செய்துக் கொள்ளும்படி வற்புறுத்தி தொல்லை கொடுத்துள்ளார். ஐதராபாத் தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் ஷரூர்நகர் பகுதியை சேர்ந்தவர் சாய் கிருஷ்ணா (36). இவர் அப்பகுதியில் உள்ள பங்காரு மைசம்மா கோவிலில் பூசாரியாக இருந்து வருகிறார். இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. இந்நிலையில், நற்குடா கிராமத்தைச் சேர்ந்த அப்சரா (30) என்ற பெண்ணுடன் பூசாரி சாய் கிருஷ்ணாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில்…

மேலும் படிக்க

நடிகர் ‘பாலகிருஷ்ணா’ பிறந்தநாள் – “பகவந்த் கேசரி” டீசர் உற்சாகமடைந்த ரசிகர்கள்..!!

நந்தமூரி பாலகிருஷ்ணா ஆந்திர சட்டமன்ற உறுப்பினரும், இந்தியத் திரைப்பட நடிகருமாவார். ஜூனியர் பாலய்யா என அழைக்கப்படும் இவர், ஆந்திராவில் முன்னாள் முதல்வர் என்.டி.ராமராவின் ஆறாவது மகனாவார். இவர் குழந்தை நட்சத்திரமாக தாத்தம்மா கலா திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் தெலுங்கு தேசம் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தார். தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் நந்தமுரி பாலகிருஷ்ணா. நடிகைராக மட்டுமின்றி இயக்குநராகவும் தயாரிப்பாளராகவும் உள்ளார் பாலகிருஷ்ணா. ஆக்ஷன் காட்சிகளில் பட்டையை கிளப்பும் பாலகிருஷ்ணாவுக்கு என…

மேலும் படிக்க

தாம்பரம் சூப்பர் மார்க்கெட் உரிமையாளரிடம் ரூ.10,000 லஞ்சம் பெற்ற உதவி ஆய்வாளர் கைது..!!

தாம்பரம் சுற்றுவட்டார பகுதியில் உள்ள தனியார் சூப்பர் மார்க்கெட் உரிமையாளரிடம்,  ரூபாய் 10,000 லஞ்சம் பெற்ற தொழிலாளர் துறை உதவி ஆய்வாளரை லஞ்ச ஒழிப்பு துறையினர் அதிரடியாக கைது செய்தனர். சென்னை அடுத்த மேற்கு தாம்பரம், வ.உ.சி தெருவில் தமிழ்நாடு அரசு தொழிலாளர் துறை உதவி ஆய்வாளர் அலுவலகம் உள்ளது. இங்கு உதவி ஆய்வாளராக பொன்னிவளவன் என்பவர் பணியாற்றி வந்தார். இந்நிலையில் இவர் தாம்பரம் சுற்றுவட்டார பகுதியில் உள்ள தனியார் சூப்பர் மார்க்கெட்டுகளில் மிரட்டி மாதம், மாதம்…

மேலும் படிக்க

மதுரக்காரங்களுக்கு இப்படி ஒரு வாய்ப்பா..?!!

மதுரை ரயில் நிலையத்தில் இனி கட்டணம் செலுத்தி திருமண ஜோடிகள் போட்டோ ஷூட் நடத்திக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்திய ரயில்வே துறையின், வருவாய் பிரிவு சார்பில் பல்வேறு நிலையங்களில் வருவாயை பெருக்குவதற்கு பல முயற்சிகள் மேற்கொள்ளபட்டு வருகின்றன. அந்த வகையில், உள்ளூர் தயாரிப்புகளை ஊக்குவிக்க ரயில் நிலையங்களில் இலவசமாக விற்பனை செய்ய “ஒரு நிலையம் ஒரு பொருள்” திட்டம், ரயில் பெட்டிகளில் விளம்பரம் செய்வது, ரயில் நிலையத்திற்கு வந்து செல்லும் வாகனங்களுக்கு கட்டண நிர்ணயம் உள்ளிட்ட பல்வேறு…

மேலும் படிக்க

ஜூனியர் மகளிர் ஆசிய கோப்பை ஹாக்கி 2023 : இறுதிப் போட்டியில் இந்தியா..!!

ஜூனியர் மகளிர் ஆசிய கோப்பை ஹாக்கி தொடரின் இறுதிப் போட்டிக்கு இந்திய அணி முன்னேறி அசத்தியுள்ளது. ஜப்பானின் கிபு மாகாணத்தில் ககாமிகாஹரா நகரில் ஜூனியர் மகளிர் ஆசிய கோப்பை 2023 ஹாக்கி தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் தற்போது அதன் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. லீக் சுற்றுகளின் முடிவில் நடப்பு சாம்பியன் சீனா, முன்னாள் சாம்பியன் தென்கொரியா, இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய 4 அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறின. அதன்படி இன்று நடைபெற்ற அரையிறுதிப்…

மேலும் படிக்க

என்னது..!! ஒரு கிலோ மாம்பழம் ரூ 2.75 லட்சமா..??!!

உலகின் விலையுர்ந்த  மாம்பழ வகையான மியாசாகி மேற்கு வங்க மாம்பழ திருவிழாவில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.  மல்கோவா, பங்கனபள்ளி உள்ளிட்ட மாம்பழ வகைகளை கேள்விப்பட்டிருக்கிறோம்.  அது என்ன மியாசாகி? ஜப்பான் நாட்டை சேர்ந்த இந்த மாம்பழத்திற்கு சர்வதேச மார்க்கெட்டில் கடும் கிராக்கி உண்டு. ஒரு கிலோ 2,75 லட்ச ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த மாம்பழம் ஜப்பானின் கியூஷு மாகாணத்தில் வளர்க்கப்படுகின்றன. 70 களின் பிற்பகுதியில்  இந்த  மாம்பழ  உற்பத்தி தொடங்கியது. மியாசாகி என்பது ஒரு வகை “இர்வின்” மாம்பழமாகும், இது தென்கிழக்கு…

மேலும் படிக்க
WhatsApp
YouTube
Instagram
Telegram