பட்டப்பகலில் நகராட்சி அலுவலகத்தில் புகுந்து மேற்பார்வையாளர் வெட்டிக்கொலை ~ செங்கோட்டையில் பரபரப்பு..!!
செங்கோட்டையில் நகராட்சி அலுவலகத்தில் மேற்பார்வையாளர் மர்ம கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். செங்கோட்டை, தென்காசி மாவட்டம் செங்கோட்டை விஸ்வநாதபுரத்தை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் ராஜேஷ் (வயது 25). இவர் செங்கோட்டை நகராட்சி அலுவலகத்தில் தற்காலிக மேற்பார்வையாளராக பணியாற்றி வந்தார். இன்று காலை ராஜேஷ் வழக்கம் போல நகராட்சி அலுவலகத்திற்கு பணிக்கு சென்றார். பின்னர் சிறிது நேரத்தில் வெளியே செல்வதற்காக மீண்டும் தனது மோட்டார் சைக்கிளில் புறப்பட தயாரானார். அப்போது அங்கு வந்த ஒரு கும்பல் அவரை சரமாரியாக…