சாலையைக் கடக்க முயன்ற 3 யானைகள் லாரி மோதி உயிரிழப்பு..!!

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் பலமனேர் அருகே நேற்று இரவு சாலையை கடக்க முயன்ற யானைகள் மீது வேகமாக சென்ற லாரி மோதியது. இதில் 3 யானைகள் உயிரிழந்தன. சித்தூர்- பலமனேறு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஜாகமரலா சந்திப்பு அருகே நேற்றுஇரவு சாலையை கடக்க முயன்ற யானைகள் மீது அந்த வழியாக வேகமாக சென்று கொண்டிருந்த லாரி மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில்இரண்டு குட்டி யானைகளும் ஒரு பெரிய யானையும் இறந்து விட்டன.விபத்து பற்றிய தகவல்…

மேலும் படிக்க

‘மாமன்னன்’ திரைப்படத்தின் டிரெய்லர் எப்போது..!!

வடிவேலு மற்றும் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள மாமன்னன் திரைப்படத்தின் டிரெய்லர் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  நடிகர்கள் வடிவேலு, ஃப்கத் ஃபாசில், கீர்த்தி சுரேஷ் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் மாமன்னன். இந்த திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். கடந்த ஜூன்1 ம் தேதி இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா  மிக பிரம்மாண்டமான முறையில் நடைபெற்றது. நீண்ட இடைவெளிக்கு பின் வடிவேலு இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து…

மேலும் படிக்க

விஜய் வர்மா காதலரானது எப்படி..?? மனம் திறந்த நடிகை தமன்னா..!!

நான் எதிர்பார்த்து காத்திருந்த நபர் விஜய் வர்மா தான் என நடிகை தமன்னா தனது காதலை ஒப்புக்கொண்டார். தமிழில் விஜய், அஜித், சூர்யா, விஷால், தனுஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ள தமன்னா தெலுங்கு, இந்தியிலும் அதிக படங்களில் நடித்திருக்கிறார். இவர் நடிப்பில் வெளியான பாகுபலி இவருக்கு திருப்புமுனை படமாக அமைந்தது. இவர் தற்போது இயக்குனர் நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் பாலிவுட்டில் இவர் நடித்துள்ள ‘லஸ்ட்…

மேலும் படிக்க

“எளிய விஷயங்கள் கூட சில நேரங்களில் கடினமாக இருக்கலாம்” ~ கிரிக்கெட் வீரர் ‘ரிஷப் பந்த்’ ட்வீட்..!!

இந்திய கிரிக்கெட் அணி வீரரான ரிஷப் பந்த், கடந்த ஆண்டு டிசம்பரில் கார் விபத்திற்கு பின் பல்வேறு பயிற்சிகளுக்கு பிறகு, தான் சாதாரண நிலைக்கு மீண்டு வரும் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.  இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பரான  ரிஷப் பந்த் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 30-ம் தேதி டெல்லியில் இருந்து காரில் புறப்பட்டு உத்தராகண்ட் மாநிலம் ரூர்க்கிக்கு தனது தாயை பார்க்க வந்துகொண்டிருந்தார். அதிகாலையில் அவர் வந்த கார் சாலை தடுப்பில் மோதி விபத்தில்…

மேலும் படிக்க

நீட் தேர்வில் விலக்கு: நாங்கள் உறுதியாக உள்ளோம் ~ அமைச்சர் ‘மா சுப்பிரமணியன்’..!!

சென்னை, சென்னையில் அமைச்சர் மா சுப்பிரமணியன் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:- நீட் தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ள நிலையில் மாணவர்களை அலைபேசியில் அழைத்து உளவியல் ஆலோசனை வழங்க அரசு முடிவு செய்யப்பட்டுள்ளது. நீட் தேர்வில் இருந்து விலக்கு குறித்து மத்திய கல்வித்துறை சில விளக்கங்களை கோரியுள்ளது. அதன்படி நீட் தேர்வு விலக்கு தொடர்பாக மத்திய அரசுக்கு இரண்டு மூன்று நாட்களில் விளக்கம் அளிக்கப்படும். நீட் தேர்வில் இருந்து தமிழகம் விலக்கு பெறுவது என்ற கருத்தில் நாங்கள் உறுதியாக…

மேலும் படிக்க

திமுகவினரை சீண்டி பார்க்க வேண்டாம், இது மிரட்டல் அல்ல, எச்சரிக்கை ~ முதல்-அமைச்சர் ‘மு.க.ஸ்டாலின்’..!!

அறிவிக்கப்படாத எமர்ஜென்சி நடந்து வருவதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். சென்னை, அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான அமலாக்கத்துறை நடவடிக்கை குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடியோ வெளியிட்டு அதில் கூறியதாவது:- திமுகவினரை சீண்டிப் பார்க்க வேண்டாம், தாங்க மாட்டீர்கள்; எங்களுக்கும் எல்லா அரசியலும் தெரியும்; இது மிரட்டல் அல்ல, எச்சரிக்கை. செந்தில் பாலாஜி கைது அப்பட்டமான அரசியல் பழிவாங்கும் செயல் என்பதில் யாருக்கும் கொஞ்சமும் சந்தேகமில்லை. அமலாக்கத்துறை மூலம் அரசியல் செய்ய பாஜக தலைமை நினைக்கிறது….

மேலும் படிக்க

பிலிப்பைன்சில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்..!! ரிக்டரில் 6.2 ஆக பதிவு..!!

மணிலா, பிலிப்பைன்ஸ் தீவின் தலைநகர் மணிலாவில் இருந்து தென்மேற்கே 140 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து உள்ள ஹுக்கே நகர் அருகே இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவாகி உள்ளது. இது பூமிக்கு அடியில் 120 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டு இருந்தது. இதனை அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இதனால், ஏற்பட்ட பொருளிழப்புகள் உள்ளிட்ட விவரங்கள் எதுவும் உடனடியாக வெளியிடப்படவில்லை….

மேலும் படிக்க

மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் முக்கொம்பு வந்தடைந்தது ~ மலர் தூவி விவசாயிகள் வரவேற்பு..!!

மேட்டூர் அணையில் இருந்து கடந்த 12-ந்தேதி திறக்கப்பட்ட தண்ணீர் இன்று முக்கொம்பு மேலணைக்கு வந்தடைந்தது. திருச்சி, காவிரி டெல்டா சாகுபடிக்காக கடந்த 12-ந்தேதி மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி தண்ணீரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவிட்டார். முன்னதாக திருச்சி, தஞ்சை மாவட்டங்களில் ரூ.90 கோடி மதிப்பீட்டில் நடைபெற்ற பாசன வாய்க் கால்கள் தூர்வாரும் பணியை மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கடைமடை வரை தங்கு தடையின்றி தண்ணீர் செல்ல ஏற்பாடு செய்யுமாறும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்….

மேலும் படிக்க

பீகாரில் சப்ராவில் 4 கைகள் மற்றும் 4 கால்களுடன் குழந்தை பிறந்து 20 நிமிடங்களில் மரணம்..!! பீகாரில் உள்ள சரண் மாவட்டத்தில் உள்ள சாப்ராவில் பெண் ஒருவர் செவ்வாய்க்கிழமை நான்கு கைகள் மற்றும் நான்கு கால்களுடன் தனித்துவமான பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார். அவள் தலையின் வடிவமும் அசாதாரணமாக இருந்தது. இந்த அசாதாரண காட்சியை காண முதியோர் இல்லத்தில் ஏராளமானோர் திரண்டது மக்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. கருத்துக்கள் மாறுபட்டன, சிலர் இதை ஒரு தெய்வீக அவதாரமாகப் பார்க்கிறார்கள், மற்றவர்கள்…

மேலும் படிக்க

நாகையில் நடுக்கடலில் 2 விசைப்படகுகள் கடலில் கவிழ்ந்து விபத்து ~ 7 மீனவர்கள் மீட்பு..!!

நாகையில் நடுக்கடலில் 2 விசைப்படகுகள் கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. நாகை, மீன்பிடி தடைக்காலம் முடிவடைந்தது 2 மாதங்களுக்கு பிறகு தமிழகத்தில் மீனவர்கள் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க விசைப்படகுகளில் புறப்பட்டு சென்றனர். அதன்படி நாகை, மயிலாடுதுறை, தஞ்சை மாவட்ட மீனவர்கள் இன்று முதல் மீன்பிடிக்க சென்றனர். நாகை, வேதாரண்யம், தரங்கம்பாடி, பூம்புகார், சீர்காழி, மல்லிப்பட்டினம், அதிராம்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து 5000-க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள் நள்ளிரவில் கடலுக்குச் சென்றனர். நாகை துறைமுகத்தில் இருந்து 100-க்கணக்கான விசைப்படகுகளுக்கு பூஜை செய்தும்,…

மேலும் படிக்க
WhatsApp
YouTube
Instagram
Telegram