தமிழகத்தில் 6 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது..!!
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் தேனி, தென்காசி, கன்னியாகுமரி, திண்டுக்கல், திருநெல்வேலி மாவட்டத்தில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், அதிகபட்ச வெப்ப நிலை 36-37 டிகிரி செல்சியஸ் முதல் குறைந்த பட்ச வெப்ப நிலை 26-27 டிகிரி செல்சியஸ் ஒட்டி இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.