தமிழ்நாட்டில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் : தேசிய மருத்துவ ஆணையம்..!!

தமிழ்நாட்டில் அரசுக்குச் சொந்தமான மருத்துவக் கல்லூரிகளில் சுமார் 5,225 இடங்களும், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சுமார் 3,300 இடங்களும் இருக்கின்றன. மாநிலத்தின் மக்கள் தொகையைப் பொறுத்தவரை, 2011-ம் ஆண்டுக் கணக்கெடுப்பின்போது 7 கோடியே 21 லட்சமாக இருந்தது. தற்போது சுமார் 8 கோடியை கடந்து இருக்கலாம் என கருதப்படுகிறது. தேசிய மருத்துவ ஆணையத்தின் புதிய விதிமுறைகளின்படி, தற்போது தமிழ்நாட்டில் சுமார் 8,300 எம்பிபிஎஸ் இடங்கள் வரை இருக்கலாம்.இந்நிலையில் தமிழ்நாட்டில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்க தேசிய…

மேலும் படிக்க

தங்கம் விலை பவுனுக்கு ரூ.54,000-க்கு விற்பனை..!!

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது. கடந்த ஆண்டு கடுமையாக குறைந்த தங்கம் விலை, அக்.4-ம் தேதி பவுன் ரூ.42,280 என்றளவில் விற்பனையானது. இதன் பின்னர் இஸ்ரேல், பாலஸ்தீன போர் எதிரொலியாக அதிகரித்த தங்கம் விலை, தொடர்ச்சியாக உயர்ந்து கடந்த டிச.4-ம் தேதி பவுன் ரூ.47,800 என்னும் புதிய உச்சத்தை அடைந்தது.கடந்த மார்ச் 28-ம் தேதி ஒரு பவுன் ரூ.50 ஆயிரம் என்ற வரலாறு காணாத உயர்வை எட்டியது….

மேலும் படிக்க

ஆஸ்கர் நூலகத்தில் ‘பார்க்கிங்’ திரைக்கதை..!!

ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், இந்துஜா, எம்.எஸ்.பாஸ்கர், ராம ராஜேந்திரா, பிரார்த்தனா நாதன், இளவரசு உள்ளிட்ட பலர் நடித்த திரைப்படம் பார்க்கிங். இந்த படம் கடந்த ஆண்டு டிசம்பர் 1ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தொடர்ந்து, ஓடிடியில் வெளியாகி ரசிகர்களின் பாராட்டுக்களைப் பெற்றது.இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண்,  எம்எஸ் பாஸ்கர் இடையே ஏற்படும் சின்ன ஈகோ பிரச்சனை எவ்வளவு பெரிய பிரச்சனையாக மாறும் என்பது மிகவும் உணர்வு பூர்வமாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கும்.  சுமார்…

மேலும் படிக்க

தைவானின் கின்மென், மாட்சு மற்றும் டோங்கி தீவுகளை சுற்றியுள்ள பகுதிகளில் சீனா 2-வது நாளாக போர் பயிற்சி..!!

சீனாவின் கட்டுப்பாட்டில் இருந்த தைவான் 1949-ம் ஆண்டு தனிநாடாக பிரிந்தது.  ஆனால் தைவானை இன்னும் தங்களது நாட்டின் ஒரு அங்கமாகமே சீனா கருதுகிறது.  எனவே தைவானை மீண்டும் தன்னுடன் இணைத்துக் கொள்ள சீனா முயற்சிப்பதாக கூறப்படுகிறது.  இதனால் தைவான் எல்லையில் போர்க்கப்பல்கள் மற்றும் விமானங்களை அனுப்பி,  சீனா அவ்வப்போது போர்ப்பதற்றத்தை ஏற்படுத்துகிறது.இந்த நிலையில்,  தைவானில் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற அதிபா் தோ்தலில் சுதந்திரத்துக்கு ஆதரவான நிலைப்பாட்டைக் கொண்ட ஜனநாயக முன்னேற்ற கட்சியின் லாய் சிங்-டே வெற்றி…

மேலும் படிக்க

டெக்னோ கேமான் 30 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்..!!

சீன நிறுவனமான டெக்னோ மொபைல் நிறுவனம் கடந்த 2006-ல் நிறுவப்பட்டது. இது 2017-ம் ஆண்டில் இந்தியச் சந்தையில் நுழைந்தது. இந்தியாவில் விற்பனை செய்யப்படும் இந்நிறுவனத்தின் போன்கள் அனைத்தும் நொய்டாவில் உள்ள உற்பத்திக் கூடத்தில் அசெம்பிள் செய்யப்படுவதாக தகவல்.டெக்னோ கேமான் 30 சீரிஸ் போன்களை இந்திய சந்தையில் அந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதில் கேமான் 30 மற்றும் கேமான் 30 பிரீமியம் என இரண்டு மாடல்கள் வெளிவந்துள்ளன. கடந்த ஆண்டு கேமான் 20 மாடல் போன் அறிமுகமாகி இருந்தது…

மேலும் படிக்க

தமிழ்நாடு அரசு கலை அறிவியல் கல்லூரி முதலமாண்டு மாணவர் சேர்க்கை

தமிழ்நாடு முழுவதும் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் 2024- 25ம் ஆண்டிற்கான இளநிலைப் பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம் மே 5ம் தேதி தொடங்கியது.  மேலும்,  இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க இயலாத மாணவர்கள்,  கல்லூரிகளில் உள்ள சேர்க்கை உதவி மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம் என கல்லூரி கல்வி இயக்ககம் தெரிவித்தது. இதையடுத்து, கல்லூரியில் சேர விரும்புவோர் http://www.tngasa.in என்ற இணையதள முகவரியில் வாயிலாகவும்,  அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள சேர்க்கை உதவி மையங்கள் வாயிலாகவும் விண்ணப்பிக்கலாம்…

மேலும் படிக்க

தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு : தென்மண்டல வானிலை ஆய்வு மையம்..!! 

தமிழ்நாட்டில் கடந்த மார்ச் மாதம் முதல் வெயில் வாட்டி வதைத்து வந்தது. அதிலும் வெப்பஅலை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் சுமார் 110 டிகிரிக்கு மேல் வெப்பம் பதிவானது. ஈரோடு போன்ற மாவட்டங்களில் 112 டிகிரி அளவுக்கு வெயில் வாட்டி வதைத்து வந்தது. சென்னையில் 105 டிகிரிக்கு உள்ளாகவே வெப்பநிலை பதிவாகி வந்தது.  வெப்ப அலை கடுமையாக இருந்த காரணத்தினால் மக்கள் அனைவரும் கடுமையாக அவதி அடைந்தனர்.இதனிடையே, கோடை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம்…

மேலும் படிக்க

குற்றால அருவிகளில் வரும் 21 ஆம் தேதி வரை சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை..!!

தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும்,  நகர்புறங்களிலும் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது.  இதனிடையே மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக பழைய குற்றால அருவியில் நேற்று திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.  இதில் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த அஸ்வின் என்ற 17 வயது சிறுவன் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்தார்.இருப்பினும் இன்று காலை முதல் குற்றாலம் பேரருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி ஆகிய அருவிகளில் தண்ணீர் குறைந்து…

மேலும் படிக்க

இனி வாட்சப் மூலம் மின் கட்டணம் செலுத்தும் முறையை தமிழ்நாடு மின்சார வாரியம் அறிமுகம்..!! 

மின் அட்டையில் ஒரு அளவு அங்கே கட்டச் சென்றால் ஒரு அளவு என குளறுபடிகள் நீடித்தன. அதன் பின்னர் மின் கட்டணம் செலுத்தும் முறையை தமிழ்நாடு அரசு கணினிமயமாக்கியது.இதனைத் தொடர்ந்து கரண்ட் பில் கட்டும் பணி எளிமைப்படுத்தப்பட்டாலும் சம்பந்தப்பட்ட மின்வாரிய அலுவலகத்திற்கு சென்று கட்டணம் செலுத்துவதை பொதுமக்கள் சிரமப்பட்டனர். சென்னை போன்ற பெருநகரங்களில் மின் வாரிய அலுலகங்கள் பல செயல்படுவதால் எந்த பகுதிக்கு எந்த அலுவலகத்தில் மின்கட்டணம் செலுத்த வேண்டும் என்கிற குழப்பமும் நீடித்தது.இதன் பின்னர் தொழில்நுட்பம்…

மேலும் படிக்க

அல்ஜீரிய : உள்நாட்டுப் போரில் காணாமல் போன ஒமர். பி என்பவர் 26 ஆண்டுகளுக்கு பிறகு கண்டுபிடிக்கப்பட்டது பெரும் நெகிழ்ச்சி..!!

 26 ஆண்டுகளுக்கு பிறகு,  Djelfa நகரில்  வைக்கோல்களுக்கு மத்தியில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் இருந்ததாக காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.  தகவலின்பேரில் அங்கு விரைந்த காவல்துறையினர் அந்த நபரை மீட்டு, விசாரணையை மேற்கொண்டனர்.கடந்த 1998 ஆம் ஆண்டு அல்ஜீரிய உள்நாட்டுப் போரின் போது 19 வயதான ஒமர். பி என்பவர்  காணாமல் போனதாக அவரின் குடும்பத்தினர் தெரிவித்தனர்.  இவர் கடத்தப்பட்டிருப்பாரா? என்று அச்சமடைந்த அவரது குடும்பத்தினர் காவல்துறையினரிடம் புகார் தெரிவித்தனர். அவரின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில்…

மேலும் படிக்க
WhatsApp
YouTube
Instagram
Telegram