தென் அமெரிக்காவில் ஈக்வடார் என்ற நாடு அமைந்துள்ளது. இந்த நாட்டின் மிகப்பெரிய சிறைச்சாலை கவ்யாஹுலி நகரில் அமைந்துள்ளது. இந்த சிறைச்சாலையில் பல்வேறு குற்ற சம்பவங்களில் தொடர்புடைய ஆயிரக்கணக்கான கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், இன்று (நவ.13) அதிகாலை இந்த சிறைச்சாலையில் உள்ள கைதிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டது.தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் மோதலை தடுத்து நிறுத்தினர். இந்த மோதலில் கைதிகள் 15 பேர் உயிரிழந்தனர். மேலும், 14 பேர் படுகாயமடைந்தனர். இந்த மோதலுக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Please follow and like us: