சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் சமூக ஊடகங்களில் சீனப் பெண் இலக்கியா மற்றும் சீன ஊடகக் குழுமத்தின் தமிழ் துறை தலைவர் கலைமகள் செய்தியாளர்களை சந்தித்தனர்.
உங்களுக்கு தாய் மொழி தமிழ். நீங்கள் தமிழ் மொழியை நேசிக்கிறீர்கள். நாங்கள் உங்களை நேசிக்கிறோம். இலக்கியா தமிழ் பாடல்களும், வீடியோக்களை சமூக வலைதளங்களில் மிகவும் நன்றாக பதிவிட்டு வருகிறார். நான் தமிழகத்திற்கு வருவது இதுதான் முதல் முறை. இங்கு வந்து தமிழ் மக்களை சந்தித்தது மிகவும் சந்தோசமாக இருக்கிறது. நீங்கள் வழங்கும் சிறப்பு செய்தித்தாள்களை பார்க்கும் பொழுது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இலக்கியாவை தமிழக மக்கள் 10 லட்சம் பேர் பாளோ செய்கிறார்கள்.
இலக்கியா கூறியதாவது :
தமிழ்நாட்டு மக்கள் என்னை தமிழ்நாட்டுக்கு வரவேண்டும் என வரவேற்கிறார்கள். அவர்களுடைய வீட்டுக்கும் வரவேற்கிறார்கள்.அவர்களுக்கு கோடி. நான்கு வருடத்திற்கு பிறகு சென்னைக்கு வந்துள்ளேன். உங்களை சந்தித்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. தமிழ் மீது மிகவும் ஆவர்ம் உள்ளது.
தமிழ் பற்றி அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ரும்புகிறேன் .நான் தமிழ் பாடத்தை சிறப்பு படமாக படித்து வருகிறேன். 2013 ஆம் ஆண்டு கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் நான் தமிழ் பயின்று கொண்டேன். தமிழ் கலாச்சாரம் எனக்கு மிகவும் பிடித்துள்ளது. தமிழ் மொழியும் சீன மொழியும் பல்லாயிரக்கணக்கான தொன்மையான செம்மொழிகளாக காணப்படுகிறது. முதலில் தமிழ் பேசும்பொழுது என்னை பார்த்து சிரித்தார்கள். நீங்கள் குழந்தைமாதிரி பேசுகிறீர்கள். என கூறினார்கள். தமிழக மக்கள் எனக்கு மிகவும் உதவி புரிந்துள்ளார்கள்.
தமிழக மக்கள் என்னை தமிழகத்திற்கு கூப்பிட்டு கோவையில் நெய் தோசை சாப்பிட வைத்தார்கள். ஒவ்வொருவரும் வீட்டிறிற்கு அழைத்து இனிப்புகள் கொடுத்தார்கள். பிறகு தீபாவளி பண்டிகைக்கு என்னை அழைத்து தலைக்கு எண்ணெய் வைத்து குளிக்க வைத்து தீபாவளி பண்டிகை கொண்டாட வைத்தார்கள்.
என்னை பொருத்தவரை சீனாவை அடுத்து இந்தியா எனக்கு மிகவும் பிடித்த நாடாக உள்ளது. சமூக வலைதளங்களில் அதிகமாக தமிழ் வீடியோக்களை பதிவிட்டு தமிழ் மக்களிடம் மிகவும் நெருக்கம் ஆனேன். இன்னொரு முறை தமிழக மக்களை பார்க்க நான் ஆசைப்படுகிறேன்.
பல ஆண்டுகளாக சென்னையின் மாற்றங்களை பார்க்க தான் இங்கே வந்திருக்கேன். சென்னை மும்பை விட சுத்தமாக இருக்கிறது. சென்னையில் எல்லா நவீன வசதிகளும் உள்ளன. என்னுடைய கல்லூரி நண்பர்களே நான் இங்கு அழைத்தேன்.அவர்கள் வரவிலலை. பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக வாழ்ந்த மொழி, செம்மொழி அது தான் தமிழ் மொழி.இரு மொழிகளும் தொன்மையான மொழி செம்மொழி. பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்கள் தமிழர்கள் தான். அது சீனாவில் வசந்த விழா போல் நடக்கிறது. கோவையில் ஒன்பது மாதங்கள் பயின்று தமிழ் கற்றுக் கொண்டேன். தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் சீனாவில் உள்ள சிறப்பம்சங்களை பற்றி தமிழ் மொழியில் பேசி வீடியோ ஒன்ற திரையிட்டார் இலக்கியா.
என் தாய்மொழி போன்று தமிழை நான் பார்க்கிறேன். கலாச்சாரம் மீது மிகவும் ஆசையாக உள்ளது. தமிழ் பாடல், அலங்காரம், உணவு போன்றவை பல்வேறு எனக்கு பிடித்திருக்கிறது. சீன கலாச்சாரத்திற்கும் தமிழ் கலாச்சாரத்திற்கும் பல்வேறு வேறுபாடுகள் உள்ளது.
NEWS EDITOR : RP