சென்னையில் ‘பீச் டிரைவ்-இன்’ தியேட்டர் ‘பிரார்த்தனா’ இடிக்கப்படுகிறது : காரில் அமர்ந்தபடி சினிமா பார்க்கும் வசதி கொண்ட முதல் திறந்தவெளி அரங்கம்..!!
பொழுதுபோக்கு என்றதும், சட்டென நினைவுக்கு வருவது சினிமாதான். ஆரம்ப சினிமா, தற்போதைய சினிமா என்று என்னதான் விமர்சித்தாலும் சினிமா என்றாலே அலாதி பிரியம்தான். 3 மணி நேரம் ஓடும் ஒரு திரைப்படம், கவலைகளை மறக்க செய்வதுடன், புதிய அனுபவங்களையும், தெரியாத விஷயங்களையும் கற்றுத்தருகிறது. இடிக்கப்படும் பழமையான தியேட்டர்கள் அந்த சினிமாவுக்கு சோதனைக்காலம் என்றால் அது கொரோனா காலம்தான். ஆம். கொரோனா காலகட்டத்தில் ஏராளமான சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டன. இதில் பெரும்பாலான தியேட்டர்கள் கைமாற்றப்பட்டு, இடிக்கப்பட்டு, தற்போது குடியிருப்பு…