லைக்குகளை அள்ளிக் குவிக்கும் நிக் ஜோனாஸ் குழந்தை புகைப்படம்..!!

இன்ஸ்டாவில் நிக்ஜோனாஸ், பகிர்ந்துள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது. அமெரிக்காவை சேர்ந்தவர் நிக் ஜோனாஸ். பாடகரும், நடிகருமான இவர், நடிகை பிரியங்கா சோப்ராவை 2018ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களில் திருமணம் ஜோத்பூரில் உள்ள உமைத் பவன் அரண்மனையில் மிக விமர்சையாக நடைபெற்றது. இந்த தம்பதிக்கு 2022ஆம் ஆண்டு  ஜனவரி மாதம் பெண் குழந்தை ஒன்று பிறந்தது. மால்டி மேரி என அழைக்கப்படும் அந்த குழந்தையின் புகைப்படத்தை தம்பதி இருவரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில் நிக் ஜோனாஸ் மகளுடன் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்….

மேலும் படிக்க

அட்லி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜவான்’ படம் ரெடி..!!”ஷாருக்கான்” கொடுத்த சுவாரஸ்ய அப்டேட்..!!

அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துள்ள ’ஜவான்’ படம், திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்பே வசூலை குவித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழில் பல வெற்றி படங்களைக் கொடுத்த இயக்குநர் அட்லி, ஷாருக்கானின் ஜவான் படத்தின் மூலம் பாலிவுட்டில் இயக்குநராக அறிமுகமாகிறார். இந்தப் படத்தில் ஷாருக்கான் இரண்டு வேடங்களில் நடிக்கிறார். ஹீரோயினாக நயன்தாரா நடிக்கிறார். தீபிகா படுகோனே, விஜய் சேதுபதி, யோகி பாபு, பிரியாமணி உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி…

மேலும் படிக்க

காஸ்ட்லியான பைக்கில் வந்து காஸ்ட்லியான செருப்பு திருட்டு..!! புகார் அளித்த மாஸ்டர் பட நடிகை..!!

மாஸ்டர் திரைப்படத்தில் நடித்த துணை நடிகையின் அடுக்குமாடி குடியிருப்புக்குள் புகுந்து அவரது காலணியை திருடிச் சென்ற இரண்டு இளைஞர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்… என்ன நடந்தது…? கொள்ளையர்கள் தொடர்பான விவரங்கள் போலீசாருக்கு கிடைத்ததா… இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம. நடிகர் விஜய் நடித்த “மாஸ்டர்” மற்றும் ஆர்.ஜெ பாலாஜி நடிப்பில் வெளியான வீட்ல விசேஷம் உள்ளிட்ட திரைப்படங்களில் துணை நடிகையாக நடித்தவர் சங்கீதா. இவர் பல சீரியல்களிலும் நடித்து பிரபல சின்னத்திரை நடிகையாகவும் வலம் வருகிறார்….

மேலும் படிக்க

திருமண வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த தமன்னா..!!

நான் இவரைத் தான் காதலிக்கிறேன் என திருமண வதந்திகளுக்கு முற்றுப் புள்ளி வைத்துள்ளார் நடிகை தமன்னா. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தவர் தமன்னா. தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் மிகவும் பிரபலமான தமன்னா, பாகுபலி திரைப்படம் மூலம் இந்திய அளவில் பிரபலமானார். தற்போது நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில், சூப்பர் ரஜினிகாந்த்துடன் இணைந்து ‘ஜெயிலர்’ படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் அவரது பப்ளி பவுன்சர் டிஸ்னி ஹாட் ஸ்டாரில் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றது. தொடர்ந்து…

மேலும் படிக்க

செந்தில்பாலாஜி வீட்டிற்கு அதிரடி படை குவிப்பு : சென்னை தலைமைச்செயலகத்தில் அமைச்சர் அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை..!!

தலைமைச்செயலகத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜி அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை, மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் காலை 8 மணி முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.முன்பு வருமானவரித்துறை சோதனையின் போது செந்தில் பாலாஜி வீட்டில் சோதனை செய்யப்படவில்லை. அவரின் தம்பி வீடு, உறவினர்கள் வீட்டில்தான் சோதனை செய்யப்பட்டது. ஆனால் இந்த முறை சென்னையில் அமைச்சர் இல்லத்திலேயே சோதனை நடக்கிறது. சென்னையில் உள்ள அமைச்சரின் அரசு இல்லம்,…

மேலும் படிக்க

திருமருகல் ஒன்றியத்தில் சூறாவளி காற்றுடன் மழை : 100 ஏக்கர் பருத்தி செடிகள் வேரோடு சாய்ந்தன..!!

நாகப்பட்டினம் திட்டச்சேரி, திருமருகல் ஒன்றியத்தில் சூறாவளி காற்றுடன் பெய்த மழையால் 100 ஏக்கர் பரப்பளவிலான பருத்தி செடிகள் வேரோடு சாய்ந்தன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். சூறாவளி காற்றுடன் மழை திருமருகல் ஒன்றிய பகுதிகளில் கடந்த 6-ந்தேதி சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. இதில் திட்டச்சேரி, திருமருகல், சீயாத்தமங்கை, கட்டுமாவடி, ஏனங்குடி, திருப்புகலூர், ஆலத்தூர், திருக்கண்ணபுரம், திருச்செங்காட்டங்குடி உள்பட பல்வேறு இடங்களில் மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன. இதனால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. காற்றுடன் பெய்த இந்த மழையால்…

மேலும் படிக்க

அச்சுறுத்தும் பீபர்பாஜாய் புயல் : 8 ஆயிரம் பேர் வெளியேற்றம், பாதுகாப்பான இடங்களில் தங்க வைப்பு…!!

பிபர்ஜாய் புயல் காரணமாக, குஜராத்தின் கடலோரப் பகுதிகளில் இருந்து 8,000 பேர் வெளியேற்றப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார் புதுடெல்லி, பிபர்ஜாய் புயல் காரணமாக, குஜராத்தின் கடலோரப் பகுதிகளில் இருந்து 8,000 பேர் வெளியேற்றப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். அரபிக் கடலில் அதிதீவிர புயலாக உருமாறியுள்ள ‘பிபா்ஜாய்’ புயல், குஜராத் மாநிலத்தின் கட்ச் வளைகுடா பகுதியில் வியாழக்கிழமை பிற்பகல் கரையைக் கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. புயல் கரையை கடக்கும்போது குஜராத்…

மேலும் படிக்க

மீன்பிடி தடைகாலம் முடிவடைய உள்ளதால் கடலுக்குள் செல்ல தயாராகும் காசிமேடு மீனவர்கள்..!!

61 நாட்கள் மீன்பிடி தடைகாலம் முடிவடைய உள்ளதால் கடலுக்குள் செல்ல காசிமேடு மீனவர்கள் தயாராகி வருகின்றனர். சென்னை தமிழகத்தின் வங்காள விரிகுடா, மன்னார் வளைகுடா கடல் பகுதிகளில் ஏப்ரல், மே, ஜூன் மாதங்களை மீன்கள் உள்ளிட்ட கடல்வாழ் உயிரினகளின் இனப்பெருக்க காலமாக, மத்திய மீன்வளத் துறை அமைச்சகம் கண்டறிந்துள்ளது. மீன் வளத்தை பெருக்கும் வகையில் இந்த காலகட்டத்தில் விசைப்படகுகள் மற்றும் இழுவைப்படகுகள் மூலம் மீன்பிடிக்க தடை விதிக்கப்படுவது வழக்கம். அதன்படி தமிழகத்தில் இந்த ஆண்டுக்கான 61 நாட்கள்…

மேலும் படிக்க

சென்னையில் வாகன ஓட்டிகளை அலற வைக்கும் நவீன கண்காணிப்பு ரோந்து வாகனங்கள்..!!

சென்னையில் விதிகளை மீறும் வாகனங்களை புகைப்படம் எடுத்து அபராத ரசீதை அனுப்பி, வாகன ஓட்டிகளை நவீன கண்காணிப்பு ரோந்து வாகனங்கள் அலற வைக்கிறது. சென்னை சென்னையில் போக்குவரத்து போலீசார் கடந்த மாதம் 31-ந்தேதி அன்று 2 நவீன நடமாடும் கண்காணிப்பு வாகனங்களை அறிமுகம் செய்தனர். இந்த வாகனங்களில் 360 டிகிரி சுழலக்கூடிய ஏ.என்.பி.ஆர். நவீன ரக கண்காணிப்பு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. இதில் ஒரு வாகனத்தின் மதிப்பு ரூ.35 லட்சம் ஆகும். தற்போது சென்னை தெற்கு மண்டல போக்குவரத்து…

மேலும் படிக்க

பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் அலுவலகத்தில் புகுந்த மர்ம நபர் ரோட்டில் இறந்து கிடந்ததால் பரபரப்பு..!!

பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் அலுவலகத்தில் புகுந்த மர்ம நபர் ரோட்டில் இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை, கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் அலுவலகம், ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையம் அருகே உள்ளது. இந்த எம்.எல்.ஏ. அலுவலகத்துக்குள் நேற்று மாலை 5.50 மணி அளவில் மர்ம வாலிபர் ஒருவர் அத்துமீறி நுழைந்தார். அலுவலகத்துக்குள் நுழைந்து உள்பக்கமாக கதவை பூட்ட முயன்றார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அலுவலக ஊழியர் அந்த வாலிபரை விரட்டினார்….

மேலும் படிக்க
WhatsApp
YouTube
Instagram
Telegram