வெல்லம் விலை உயர்வு..!!

நாமக்கல் பரமத்திவேலூர் வெல்லம் பரமத்தி வேலூர் வட்டத்தில் ஜேடர்பாளையம், சோழசிராமணி, அய்யம்பாளையம், கபிலர்மலை, பரமத்தி வேலூர், பாண்டமங்கலம், நன்செய்இடையாறு உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான ஏக்கரில் கரும்பு பயிர் செய்யப்பட்டுள்ளது. இப்பகுதிகளில் விளையும் கரும்புகளை கரும்பு ஆலை உரிமையாளர்கள் வாங்கி வந்து உருண்டை வெல்லம், அச்சு வெல்லம் மற்றும் நாட்டு சர்க்கரை ஆகியவற்றை தயார் செய்கின்றனர். பின்னர் அவற்றை 30 கிலோ கொண்ட சிப்பங்களாக (மூட்டைகளாக) கட்டி, பிலக்கல்பாளையத்தில் உள்ள வெல்ல ஏல சந்தைக்கு கொண்டு வருகின்றனர். ஒவ்வொரு…

மேலும் படிக்க

நாளை மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்..!!

நாமக்கல் சேந்தமங்கலம் துணை மின் நிலையத்தில் நாளை (சனிக்கிழமை) மின்சார பராமரிப்பு பணிகள் நடக்கிறது. எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சேந்தமங்கலம், அக்கியம்பட்டி, கோனானூர், பேரமாவூர், கொண்டமநாயக்கன்பட்டி, வடுகப்பட்டி, முத்துகாப்பட்டி, புதுக்கோம்பை, பளையபாளையம், சிவநாயக்கன்பட்டி, லக்கமநாயக்கன்பட்டி, சாலப்பாளையம், சிவியாம்பாளையம் பகுதிகளில் மின்வினியோகம் நிறுத்தப்படுகிறது. இதேபோல் குமாரபாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு நடைபெறுகிறது. இதன்…

மேலும் படிக்க

குழந்தை தொழிலாளர்களை பணியில் அமர்த்தினால் கடும் நடவடிக்கை..!!

நாமக்கல் ஒருங்கிணைப்பு கூட்டம் நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் புலம் பெயர் தொழிலாளர்கள் பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் நலச்சட்டம் கடைபிடித்தல் குறித்து தொழிற்சாலை உரிமையாளர்களுக்கான ஒருங்கிணைப்பு கூட்டம் மாவட்ட கலெக்டர் உமா தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஸ்கண்ணன் முன்னிலை வகித்தார். இதில் கலெக்டர் உமா பேசியதாவது. நாமக்கல் மாவட்டத்தில் தொழிற்சாலைகள் அதிகம் உள்ளதால், நல்ல முறையில் தொழில் வளர்ச்சி அடைய வேண்டும். இதர மாநிலங்களிலிருந்து வரும் புலம் பெயர் தொழிலாளர்கள் தொடர்பாக…

மேலும் படிக்க

திரையங்கு உரிமையாளராகும் சிவகார்த்திகேயன் : லேட்டஸ்ட் அப்டேட்..!!

நடிகர் சிவகார்த்திகேயன் சென்னையில் புதிய மல்டிபிளக்ஸ் திரையரங்கம் ஒன்றை ஏசியன் சினிமாஸ் நிறுவனத்துடன் உடன் இணைந்து தொடங்கப் போவதாக ஏசியன் சினிமாஸின் முதன்மை செயல் அலுவலர் சுனில் நரங் தெரிவித்துள்ளார். தமிழில் முன்னணி நடிகர்களில் ஒருவரான சிவகார்த்திகேயனின் மல்டிஃபிளக்ஸ் திரையரங்கிற்கு ஏ.எஸ்.கே.(ஏசியன் சிவகார்த்திகேயன் சினிமாஸ்) என்று பெயரிடப்பட்டது. பிரபல ஏசியன் சினிமாஸ் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களை வைத்து மல்டிபிளக்ஸ் திரையரங்குகளை கட்டி திறந்து வருகிறது. ஏற்கனவே அவர்கள் தெலுங்கு நடிகர்கள் மகேஷ் பாபு மற்றும் அல்லு…

மேலும் படிக்க

“காந்தாரா” 2ம் பாகம் படப்பிடிப்பு குறித்த தகவலை வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம்..!!

உலகளவில் பெருவெற்றி பெற்ற “காந்தாரா” 2ம் பாகத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் 27ம் தேதி தொடங்கும் என தயாரிப்பு நிறுவனமான ஹொம்பலே பிலிம்ஸ் அறிவித்துள்ளது. கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டியின் இயக்கத்தில் உருவான திரைப்படம் ‘காந்தாரா’. 1800களில் தொடங்கும் இக்கதை நிலம் மற்றும் நிலம் சார்ந்த மரபையும், பின்னணியையும் எடுத்து கூறுகிறது. முன்னோர்களின் மரபையும், இயற்கையும் பாதுகாக்க வேண்டும் என்பதே படத்தின் மையக்கருவாகும். கன்னட மொழியில் ரூ.16 கோடியில் உருவாக்கப்பட்ட இத்திரைப்படம் கன்னட சினிமாவில் வரவேற்பு பெற்றதை தொடர்ந்து…

மேலும் படிக்க

மணிப்பூர் தலைநகரில் மீண்டும் வன்முறை..!! பாதுகாப்புப் படையினர் மற்றும் கலவரக்காரர்கள் இடையே கடும் மோதல்..!!

இம்பால், மணிப்பூரில் கடந்த மாதம் இரு பிரிவுகளைச் சேர்ந்த மக்களிடையே மோதல் ஏற்பட்டதன் காரணமாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வன்முறை வெடித்தது. இந்த வன்முறை சம்பவங்களில் இதுவரை நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்த நிலையில், கலவரம் ஏற்பட்ட பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டு 349 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் மணிப்பூர் தலைநகர் இம்பாலில் பாதுகாப்புப் படையினர் மற்றும் கலவரக்காரர்கள் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கலவரத்தில் ஈடுபடுவோர் மீது கண்ணீர்புகை குண்டுகளை வீசி…

மேலும் படிக்க

காஞ்சீபுரம் அருகே போலி பெண் டாக்டர் கைது..!!

புகார்களின்பேரில் காஞ்சீபுரம் மாவட்ட மருத்துவப் பணிகள் இணை இயக்குனர் டாக்டர் கோபிநாத் தலைமையிலான குழுவினர் தாமல் கிராமத்தில் செயல்பட்டு வரும் தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்றனர். அங்கு அவர்கள் நடத்திய சோதனையில் மருத்துவ படிப்பு ஏதும் படிக்காமல் திலகவதி என்கிற பரிதபேகம் (வயது 45) என்பவர் நோயாளிகளுக்கு மருத்துவம் பார்த்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து காஞ்சீபுரம் மாவட்ட மருத்துவப் பணிகள் இணை இயக்குனர் டாக்டர் கோபிநாத், பாலுச்செட்டி சத்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். வழக்குப்பதிவு செய்த போலீசார்…

மேலும் படிக்க

அதிமுக பொதுக்குழு வழக்கு ஜுன் 28 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு..!!

சென்னை, அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் மற்றும் பொதுக்குழு தீர்மானங்கள் தொடர்பாக ஒ பன்னீர் செல்வம் தொடர்ந்த மேல் முறையீட்டு வழக்கு மீதான விசாரணையை வரும் 28 ஆம் தேதிக்கு சென்னை ஐகோர்ட் தள்ளி வைத்துள்ளது. எழுத்துப்பூர்வ வாதங்களை தாக்கல் செய்ய 10 நாட்கள் அவகாசம் வழங்கி கோர்ட் உத்தரவிட்டது. NEWS EDITOR : RP

மேலும் படிக்க

காஞ்சீபுரம் மாவட்ட மக்கள் தொடர்பு முகாமில் பயனாளிகளுக்கு ரூ.1¼ கோடியில் நலத்திட்ட உதவிகள்..!!

காஞ்சிபுரம் இதில் ஊரக வளர்ச்சி துறை, மாற்றுத்திறனாளி நலத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, கூட்டுறவுத்துறை உள்ளிட்ட துறைகள் சார்பில் அரங்குகள் அமைக்கப்பட்டு அரசின் திட்டங்கள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. மேலும் கடந்த மாதம் 31-ந் தேதி முதல் 12-ந் தேதி வரை நடைபெற்ற முகாமில் பொதுமக்களிடமிருந்து இலவச வீட்டுமனை பட்டா திருத்தம், பட்டா நகல், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளி உதவித்தொகை என 80 மனுக்கள் பெறப்பட்டு உரிய முறையில் தீர்வு காணப்பட்டு 170 பயனாளிகளுக்கு ரூ.1…

மேலும் படிக்க

தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்..!!

திருப்பூர், திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் இ்ன்று (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணிக்கு நடக்கிறது. இந்த முகாமில் தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு வேலை தேடுபவர்களை தேர்வு செய்ய உள்ளனர். வேலைதேடுபவர்கள் தங்கள் வேலைவாய்ப்பு பதிவு அட்டை மற்றும் சுய தகவல் படிவத்துடன் கலந்து கொள்ளலாம். தனியார் நிறுவனத்தினர் தங்கள் வருகை மற்றும் தேவையான காலியிடங்கள் குறித்த விவரங்களை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் முன்பதிவு செய்ய வேண்டும்….

மேலும் படிக்க
WhatsApp
YouTube
Instagram
Telegram