கோவை தனியார் பேருந்தில் டிக்கெட் எடுக்க கியூஆர் கோடு வசதி..!!
கோவை மாநகரில் அரசு பேருந்தின் எண்ணிக்கைக்கு சமமாக பல தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. பேருந்துகளில் தினமும் பயணிக்கும் பயணிகள் சரியான சில்லறையை கொண்டு வருவதை வழக்கமாக கொண்டிருப்பார்கள். ஆனால் பல சமயங்களில் பயணசீட்டுக்கு சரியான சில்லரை கொடுப்பது பயணிகளுக்கும், நடத்துனர்களுக்கும் பிரச்னையாகவே இருந்து வருகிறது. இந்த பிரச்னைக்கு தீர்வு காணும் விதமாக கோவையில் ஒரு தனியார் பேருந்து நிறுவனம் பயணிகள் டிக்கெட் எடுக்க கியூஆர் கோர்டு வசதியை அறிமுகம் செய்துள்ளது. இந்த நிறுவனம், வடவள்ளி-ஒண்டிப்புதூர், ஒண்டிப்புதூர்-வடவள்ளி,…