நண்பர் இறந்த அதிர்ச்சியில் உயிரை விட்ட முதியவர்..!!
திருவாரூர் நண்பர் இறந்த அதிர்ச்சியில் முதியவரும் உயிரை விட்டார். சிறுவயது முதல் இணைபிரியாமல் இருந்த நண்பர்கள் இறப்பிலும் ஒன்றாக சென்றனர். மன்னார்குடியில் நடந்த இந்த பரிதாப சம்பவம் பற்றிய விவரம் வருமாறு. சிறுவயதில் இருந்தே நண்பர்கள் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி கீழ 4-ம் தெருவில் வசித்து வந்தவர் சிவராமகிருஷ்ணன்(வயது 80). மன்னார்குடி அசேஷம் பகுதியில் வசித்து வந்தவர் ராமலிங்கம்(80). இவர்கள் இருவரின் சொந்த ஊர் மன்னார்குடியை அடுத்த தலையாமங்கலம் ஆகும். ஒரே ஊரை சேர்ந்தவர்கள் என்பதால் இவர்கள்…