சர்ச்சை கதையில் நடித்த பிரபல நடிகை விளக்கம்..!!
இந்தியில் தயாராகி சமீபத்தில் திரைக்கு வந்த தி கேரளா ஸ்டோரி படம் சர்ச்சையில் சிக்கியது. படத்துக்கு மேற்கு வங்காள அரசு தடை விதித்தது. தமிழ்நாட்டிலும் படத்தை திரையிடுவதை நிறுத்தினர். தி கேரளா ஸ்டோரி படத்தில் அடா சர்மா, சித்தி இத்னானி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து இருந்தனர். சித்தி இத்னானி தமிழில் ஏற்கனவே வெந்து தணிந்தது காடு மற்றும் சமீபத்தில் திரைக்கு வந்து ஓடிக்கொண்டு இருக்கும் காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்து…