கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான கென்யாவில் மேற்கு பகுதியில் டிரக் ஒன்று விபத்தில் சிக்கியது. டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய டிரக் அடுத்தடுத்து வாகனங்களில் மோதிக்கொண்டு சாலையோரம் நின்றவர்கள் மீதும் மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 51 பேர் பலியாகினர். 32 பேர் காயம் அடைந்தனர். நைரோபியில் இருந்து 200 கி.மீட்டர் தொலைவில் உள்ள லண்டியானி நகரத்தில் இந்த விபத்து நடைபெற்றுள்ளது. இந்த பகுதி அடிக்கடி விபத்து ஏற்படும் பகுதிகளில் ஒன்றாகும்.
NEWS EDITOR : RP
Please follow and like us: