விராட் கோலி அனுஷ்கா சர்மா ஜோடி தற்போது இங்கிலாந்து சென்றுள்ளது. இந்நிலையில் அனுஷ்கா சர்மா இணையத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் பெரிய பை ஒன்றை தோளில் மாட்டிக்கொண்டு காபி குடித்தபடி மெட்ரோ ரயில் நிலையத்தில் சிரித்தபடி அனுஷ்கா நடந்து செல்கிறார்.
மற்றொரு வீடியோவில் கணவர் கோலியுடன் நடந்து செல்லும் வீடியோ ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார். கறுப்பு கோட் வெள்ளை பேண்ட் அணிந்திருக்கும் கோலியை அனுஷ்கா செல்போனில் க்ளிக் செய்கிறார். பின்னர் இருவரும் சிரித்தபடி அங்கிருந்து செல்கின்றனர். இறுதியில் காபி கோப்பையை அனுஷ்கா குப்பைத்தொட்டியில் போடுகிறார்.
இதோடு அந்த வீடியோ நிறைவு பெறுகிறது. இன்ஸடாவில் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோ லைக்குகளை அள்ளிக்குவிக்கிறது. இதேபால் கடந்த ஜூன் மாதம் லண்டனில் உள்ள ஹோட்டல் ஒன்றில் அனுஷ்கா விராட் கோலி இருந்த வீடியோ வெளியானது.
NEWS EDITOR : RP