நடிகர் சூர்யாவின் 43-வது படத்தை சுதா கொங்காரா இயக்குகிறார். முன்னதாக, சுதா கொங்காரா இயக்கிய ‘சூரரைப் போற்று’ படத்தில் நடித்து சிறந்த நடிகருக்கான தேசிய விருதை சூர்யா வென்றிருந்தார். படத்தின் பெயரை இன்னும் அறிவிக்கவில்லை.மேலும் இப்படக்குழு படத்தின் அறிவிப்பு விடியோ ஒன்றை வெளியிட்டது. இதில், போராட்டம், மக்கள் கூட்டம், ரேடியோ, பழைய ரக துப்பாக்கி, ஒலிவாங்கி ஆகியவை இடம்பெற்றுள்ளது. இந்நிலையில், இப்படம் அரசியலை மையப்படுத்தி 1970, 80களில் நடக்கும் படமாக உருவாக வாய்ப்புள்ளதாகத் தோன்றுகிறது. நடிகர்கள் துல்கர் சல்மான், விஜய் வர்மா, நடிகை நஸ்ரியா ஆகியோர் நடிக்க உள்ளதாக கூறியுள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற ஜனவரி மாதம் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் துவங்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
Please follow and like us: