தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் கடந்த மாதம் 28-ம் தேதி சென்னை திருவான்மியூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் 10 வகுப்பு மற்றும் 12 வகுப்பு பொதுத் தேர்வுகளில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு விருது மற்றும் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.இதில் 800க்கும் மாணவ மாணவிகள் பங்கு பெற்றனர். தொடர்ந்து 10 மணி நேரம் இந்த விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்று முடிந்தது. மாணவ மாணவிகளுக்கு வைரத் தோடு , மாணவர்களுக்கு மோதிரம் பரிசாக வழங்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்டமாக நடிகர் விஜய்யின் ‘தளபதி விஜய் கல்வி விருது வழங்கும் விழா’ இன்று (ஜூலை 3) சென்னை திருவான்மியூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்று வருகிறது.
Please follow and like us: