தங்கத்தின் விலை ஒரு நாள் உயர்வதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக இருந்து வருகிறது. இந்த நிலையில், சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை இன்று சற்று அதிகரித்துள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ரூ.46,880-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டு வரும் நிலையில், இன்று 47,000 நெருங்கியுள்ளது. இது பொது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் ஒரு கிராம் 30 காசுகள் உயர்ந்து ரூ.80.70-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.300 உயர்ந்து ரூ.81,000-க்கும் விற்பனையானது.
Please follow and like us: