குஜராத்தின் ஆமதாபாத் நகரில் சயின்ஸ் சிட்டிக்கு பிரதமர் மோடி இன்று சென்றார். அவர் ரோபோ கண்காட்சியை பார்வையிட்டார். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடியுடன் கவர்னர் ஆச்சார்யா தேவவிரத் மற்றும் முதல்-மந்திரி பூபேந்திர பட்டேல் ஆகியோரும் கலந்து கொண்டனர். குஜராத்தில், 22 மாவட்டங்களில் கிராமப்புற வைபை வசதிகள் உள்பட ரூ.5,206 கோடி மதிப்பிலான வளர்ச்சி பணிகளை அவர் சோட்டா உதேப்பூரில் தொடக்கி வைக்க உள்ளார். இந்த வைபை வசதிகளால் 7,500 கிராமங்களை சேர்ந்த 20 லட்சம் பேர் பயனடைவார்கள்.
NEWS EDITOR : RP
Please follow and like us: