வருகிற 28-ந்தேதி மிலாடி நபி தினம் மற்றும் அடுத்த மாதம் (அக்டோபர்) 2-ந்தேதி காந்தி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனை கடைகள், உரிமம் பெற்ற மதுபான பார்கள் ஆகியவை மூடியிருக்க வேண்டும் என்றும், அன்றைய தினங்களில் எவ்வித மது விற்பனையும் மேற்கொள்ள கூடாது என்றும் அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, வருகிற 28-ந்தேதி, அக்டோபர் 2-ந்தேதி ஆகிய நாட்களில் தேனி மாவட்டத்தில் இயங்கிவரும் டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனை கடைகள் மற்றும் உரிமம் பெற்ற பார்கள் கட்டாயம் மூடப்பட வேண்டும். அன்றைய நாட்களில் மது விற்பனை எதுவும் மேற்கொள்ள கூடாது.
NEWS EDITOR : RP
Please follow and like us: