பிளஸ் 2 மாணவர்கள், தங்களது அசல் மதிப்பெண் சான்றிதழ்களை இன்று (ஜூலை 31) முதல் பெற்றுக்கொள்ளலாம் என தமிழ்நாடு தேர்வுத்துறை தெரிவித்துள்ளது. மாணவர்கள், தாங்கள் படித்த பள்ளிகளில் மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளலாம் என அரசு தேர்வுத்துறை இயக்ககம் தெரிவித்துள்ளது.
கடந்த மாா்ச் மாதம் நடைபெற்ற பிளஸ் 2 பொதுத் தோ்வை எழுதிய மாணவா்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் இன்று (ஜூலை 31-ம் தேதி) முதல் வழங்கப்படவுள்ளன. மாணவா்கள் தாங்கள் படித்த பள்ளிகள் வாயிலாகவும், தனித் தோ்வா்கள் தாங்கள் தோ்வெழுதிய மையங்கள் வாயிலாகவும் சான்றிதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம். மறுகூட்டல், மறுமதிப்பீடு முடிவுகளில் மாற்றம் இருந்த மாணவா்களுக்கு திருத்தப்பட்ட அசல் சான்றிதழ்கள் வழங்கப்படும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
NEWS EDITOR : RP