தமிழகம் முழுவதும் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று தேர்தல் அறிக்கையாக தி.மு.க. சார்பில் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் வரும் செப்டம்பர் மாதம் 15-ந்தேதி முதல் இந்த திட்டம் தொடங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து மகளிருக்கு ரூ.1000 வழங்குவதற்கான ஏற்பாடுகளை தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், முதற்கட்டமாக இதற்கான விண்ணப்பங்கள் வெளியிடப்பட்டுள்ளது. அந்த தொகையை பெற தகுதியானவர்களின் நிபந்தனைகளும் அரசு சார்பில் வெளியிடப்பட்டது. இந்த நிலையில் திருப்பூர் வடக்கு தாலுகாவில் உள்ள 145 ரேஷன் கடைகளுக்குட்பட்ட தகுதி வாய்ந்த மகளிரிடம் விண்ணப்பங்களை பெற்று இணையதளத்தில் பதிவேற்றம் செய்வது தொடர்பான பயிற்சி நேற்று திருப்பூர் அங்கேரிபாளையம் ரோடு கொங்கு வேளாளர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதில் இல்லம் தேடி கல்வி திட்ட ஆசிரியர்கள், மகளிர் சுய உதவி குழுவினர் மற்றும் அரசு அதிகாரிகள் உள்பட 320 பேருக்கு பயிற்சி வழங்கப்பட்டது. இதை திருப்பூர் சப்-கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் நேரில் சென்று ஆய்வு செய்தார். மேலும் பயிற்சியில் கலந்து கொண்டவர்களிடம் பயிற்சி தொடர்பான முழு விவரங்களையும் அவர் கேட்டறிந்தார்.
NEWS EDITOR : RP